உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3-வது முறையாக மோடி பிரதமர்: நட்டா

3-வது முறையாக மோடி பிரதமர்: நட்டா

புதுடில்லி: டில்லி பா.ஜ,, தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்பார் என நட்டா கூறினார்.இத்தேர்தலில் பா.ஜ., 239 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து டில்லி, பா.ஜ., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியை பா.ஜ.வினர் கொண்டாடினர். தேசிய தலைவர் நட்டா பேசியது, தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலாக பெற்றுள்ளது. 239 தொகுதிகளில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ