உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் கேப்டனுக்கு இன்று பிறந்த நாள்... மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

நாட்டின் கேப்டனுக்கு இன்று பிறந்த நாள்... மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிறந்த நாள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்த நாள். நாடு முழுவதிலும் பா.ஜ., தொண்டர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tgqfilop&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வாழ்த்துகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'உங்கள் மிகச்சிறந்த தலைமைப்பண்பின் மூலம் நாட்டின் வளத்தையும், கவுரவத்தையும் மேம்படுத்தியுள்ளீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரபலமான பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என்று கூறி உள்ளார். அவர் தனது பதிவில் கூறி இருப்பதாவது;

பிரபலம்

அயராத உழைப்பு, பக்தி மற்றும் தொலைநோக்கு பார்வையால் மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலகளவில் புதிய நற்பெயரையும் பெற்றுத் தந்த பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அமித் ஷா தமது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதயம்

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தமது வாழ்த்துச் செய்தியில், வலிமையான, வளமான இந்தியாவுக்கான உங்களின் பார்வை ஒவ்வொரு இதயத்திலும் எதிரொலிக்கிறது. ஆற்றல்மிக்க தலைமையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நாட்டை மாற்றி அமைக்கவும், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவும் தொடரட்டும் என்று கூறி உள்ளார்.

கேப்டன்

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டு உள்ள வாழ்த்தில், உங்களின் தலைமையின் கீழ் நாடு பொருளாதார வல்லரசாக மாறுகிறது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற உங்களின் எண்ணம் நிறைவேற சக்தி கிடைக்க வேண்டும். தங்களின் முயற்சிகளுக்கு மகாராஷ்டிரா துணை நிற்கும். நாட்டின் கேப்டனான உங்கள் தலைமையில் 21ம் நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டு என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆயுள்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மோடி பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பா.ஜ., கட்சியினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரத்த தான முகாம்கள், பொது மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

radha
செப் 18, 2024 11:06

கப்பலை தரை தட்ட வைத்த கேப்டனுக்கு மொத்தமே குவியும் 45 பேர்தான் வாழ்த்தி இருக்கிறார்களா?


Venkatesan
செப் 17, 2024 19:15

Many happy returns of the day, Modi ji


Rengaraj
செப் 17, 2024 17:07

நமது இந்தியாவின் பெருமை மற்றும் புகழ் மேலும் மேலும் உயரவேண்டும். அதற்கு நீங்கள் இந்தியதாயின் மற்றுமொரு தவப்புதல்வராய் நீடுழி வாழ வேண்டும். வாழ்க வாழ்க பல்லாண்டு


Thirumal Kumaresan
செப் 17, 2024 16:39

வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் திரு நரேந்திர மோடிக்கு ஜெய்


vijai
செப் 17, 2024 16:02

happy returns of the day captain Modi ji


venugopal s
செப் 17, 2024 14:17

தந்தை பெரியாருக்கு இன்று பிறந்த நாள், அவர் புகழ் மற்றும் கொள்கை சிறக்க வாழ்த்துக்கள்!


ஆரூர் ரங்
செப் 17, 2024 15:30

21 ஆம் பக்கத்தை எழுதியவர் வாழ்க.


Jai Sankar Natarajan
செப் 17, 2024 15:57

உலகத்துக்கே ஒழுக்கம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்த தமிழக மக்களை. திக என்ற பெயரில் ஒழுக்கம்யில்லா மக்களை உருவாக்கியதில் பெரும் பங்கு சேரும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 17, 2024 16:01

யார் ?


vijai
செப் 17, 2024 16:02

என்ன கொள்கை


சமூக நல விரும்பி
செப் 17, 2024 13:12

மோடிஜி அவர்களே உங்களுக்கு எவ்வளவு வாழ்த்து. கூறினாலும் போதாது. அந்த அளவு இந்திய நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அயராது உழைக்கும். அளவு உங்கள் கட்சியில் அனைவரும் வேலை செய்வது இல்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நார்மலாக எல்லோரும் கூறுவது அதிக தீங்கிலாத ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதன் படி பா. ஜ ஆட்சி.சூப்பர். மனிதன் ஆசைக்கு அளவு கிடையாது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நல்லாட்சி கிடைத்தால் மக்கள் உங்களை அன்புடன் எப்போதும் வரவேற்பார்கள். ஜெய்ஹிந்த். வந்தேமாதரம்.


Subramanian N
செப் 17, 2024 12:43

பிறந்த நாள் காணும் நமது மோடிஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்


Narayanan Muthu
செப் 17, 2024 12:36

சிரிக்க வைக்கும் சங்கிகளின் கருத்துக்கள்.


சாமிநாதன்,மன்னார்குடி
செப் 17, 2024 13:50

வயிறு எரியும் அறிவாலய அடிமைகளின் கருத்துகள் வேற வழியில்லை ஊபிஸ்களே இன்னும் நாலரை வருடங்கள் இப்படி புலம்பியேதான் ...ணும்?


venugopal s
செப் 17, 2024 12:25

ஆச்சரியம் ஆனால் உண்மை


சமீபத்திய செய்தி