உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசாவில் அமைதி முயற்சிகளில் முன்னேற்றம்: டிரம்பின் பணிக்கு மோடி வரவேற்பு

காசாவில் அமைதி முயற்சிகளில் முன்னேற்றம்: டிரம்பின் பணிக்கு மோடி வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காசாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, அதற்காக அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை பாராட்டியுள்ளார்.காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. தற்போது காசா பகுதியில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காசாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அதற்கு தலைமை வகித்து அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை நாங்கள் வரவேற்கிறோம். பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் முடிவு, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றத்தை குறிக்கிறது. நியாயமான முறையில், அமைதியை நோக்கி எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anbuselvan
அக் 04, 2025 13:38

செய்ததை சொன்னால் நிஜமான பாராட்டு கிடைக்கும். செய்யாததை சொன்னால் அதற்கு எதிர்ப்பு கொடுப்போம் னு இந்த வாழ்த்தை எடுத்து கொள்ளலாமா? இப்போ இந்த முயற்சி வெற்றி அடைந்தாள் நாங்களே உங்களுக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம்.


Field Marshal
அக் 04, 2025 13:33

எத்தனை பிணைக்கைதிகள் என்று ஹமாஸ் தெரிவிக்காது ... வலு குறைவாக இருக்கும்போது சமாதானம் பேசுவார்கள் ..இஸ்ரேல் கொஞ்சம் கவனக்குறைவுடன் இருந்தால் பழைய குருடி கதவை திறடி மாதிரி வெடிக்க ஆரம்பிப்பார்கள்


Kasimani Baskaran
அக் 04, 2025 11:00

தீவிரவாதத்துக்கு பின்னடைவு என்றால் கொண்டாடப்படவேண்டிய விஷயம்தானே...


Barakat Ali
அக் 04, 2025 10:42

அமெரிக்காவைப் பொருட்படுத்தாமல், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து மோடி கடிதம் எழுதியிருந்தால் அச்செயல் அமெரிக்காவுக்கு ஒரு மூக்குடைப்பாக இருந்திருக்கும் .....


krishna
அக் 04, 2025 10:20

வேறென்ன அமெரிக்காவின் ஆயுத சோதனை . பழைய டெக்னாலஜி விற்பனை மற்றும் புதியது டெஸ்டிங்


Ramesh Sargam
அக் 04, 2025 10:05

அந்த நோபல் பரிசுக்கு போட்டியா? மோடி அப்படி எல்லாம் கேட்டு பெறமாட்டார். அவருக்கு தானாக தான் கிடைக்கும்


s.sivarajan
அக் 04, 2025 09:11

காஸாவும் , உக்ரைனும் ஏதோ ஒரு சர்வதேச அரசியலில் சிக்கியிருப்பது போலுள்ளது


சமீபத்திய செய்தி