உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்

நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்

ஐதராபாத்: நடிகை சவுந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் அது விபத்து அல்ல, கொலை என சமூக ஆர்வலர் ஒருவர் ஆந்திரா போலீஸில் புகார் அளித்துள்ளார். இதில் நடிகர் மோகன்பாபுவிற்கும் தொடர்பு உள்ளதாக அவர் கூறிய நிலையில் இதனை சவுந்தர்யாவின் கணவர் மறுத்துள்ளார்.தமிழில் பொன்னுமணி, அருணாசலம், படையப்பா, தவசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. கர்நாடகாவை சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். 2004ல் தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்றபோது அது விபத்திற்குள்ளாகி மரணம் அடைந்தார். விபத்து நடந்த சமயத்திலேயே இது விபத்து அல்ல என்பது மாதிரியான பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவின் கம்மம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eog7y9qs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், ‛‛நடிகை சவுந்தர்யா மரணம் அடைந்தது விபத்தால் அல்ல, கொல்லப்பட்டு உள்ளார். ஜலபள்ளி பகுதியில் சவுந்தர்யாவிற்கு 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதை வாங்குவது தொடர்பாக நடிகர் மோகன் பாபு, சவுந்தர்யா இடையே பிரச்னை இருந்து வந்தது. சவுந்தர்யா இறந்தபின் அந்த நிலத்தை மோகன்பாபு சட்டவிரோதமாக ஆக்கிரமத்திருக்கிறார். அந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும். இந்த புகாரால் எனக்கு மோகன்பாபு தரப்பில் இருந்து மிரட்டல் வரலாம். ஆகையால் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த 6 ஏக்கர் நிலம் தொடர்பாகத்தான் மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே பிரச்னை உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் அவர் விபத்தால் இறக்கவில்லை, கொல்லப்பட்டிருக்கிறார் என ஒருவர் புகார் அளித்து இருப்பது தெலுங்கு, கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோகன்பாபுவையும் இதில் தொடர்புபடுத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன்பாபு, நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுந்தர்யா கணவர் மறுப்பு

இந்நிலையில் சவுந்தர்யா மரணம் தொடர்பாக சிட்டிமல்லு அளித்த புகாருக்கு சவுசந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மோகன் பாபு உடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நல்ல நட்புடன் உள்ளோம். சவுந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தையும் அவர் வாங்கவில்லை. ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Dummy
மார் 12, 2025 21:25

இதுக்கு தான் நான் ஹெலிகோப்டேரில் போறதே இல்ல ... just white board bus ... ஹி ... ஹி .. ஹி :- -


Bhakt
மார் 12, 2025 20:30

ரசினியோட டிகிரி தோஸ்த்.


Kanns
மார் 12, 2025 19:00

She was Murdered Using heliCopter Crash by Congress as Actively did Propagandas for BJP in Elections


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 20:51

அப்போ ராஜசேகர் ஹெலிகாப்டர் ?


Palghat Parameswaran
மார் 12, 2025 18:59

இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? 2004 அல்லது 2005 இல் போலீஸ் இடம் சொல்லி இருக்க வேண்டும்.


Natchimuthu Chithiraisamy
மார் 12, 2025 16:47

பெரியவர்களின் எல்லா கொலையும் விபத்துதான்.


Perumal Pillai
மார் 12, 2025 14:20

The last line lends credence to the accusation.


Narayanan
மார் 12, 2025 13:52

சமூக ஆர்வலர் இருபது ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் ? சும்மா எதையாவது சொல்லி போலீஸ் மற்றும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறார் இவர் மேல் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும் . இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமாம் . வேறு ஏதோ பிரச்சனை . போலீஸ் பாதுகாப்பு கேட்கிறார்


குமரி குருவி
மார் 12, 2025 13:44

சத்தியம் சாகாது என்பது இதனை தானோ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை