உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் கையெழுத்திட்டு கடிதம்!

பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் கையெழுத்திட்டு கடிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில்,நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக, லோக்சபாவில் மொத்தம் 145 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 63 எம்.பி.க்களும் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்த 145 லோக்சபா எம்.பி.,க்களில் அனுராக் தாக்கூர், ரவி சங்கர் பிரசாத், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் , ராஜீவ் பிரதாப் ரூடி, பிபி சவுத்ரி, சுப்ரியா சுலே மற்றும் வேணுகோபால் ஆகியோர் அடங்குவர்.அரசியலமைப்பின் பிரிவுகள் 124, 217 மற்றும் 218ன் கீழ் நீதிபதி வர்மாவுக்கு எதிராக நோட்டீஸ் சமர்ப்பிக்கப் பட்டது.ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் லோக்சபாவில் குறைந்தது 100 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் குறைந்தது 50 எம்.பி.க்களும் கையெழுத்திட வேண்டும். இந்த தீர்மானத்தை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.கடந்த சில தினங்களுக்கு முன்பு, பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பில் 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். பதவி நீக்கம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்து உள்ளனர் என பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Varadarajan Nagarajan
ஜூலை 21, 2025 19:12

அந்த நீதிபதியை பதவிநீக்கம் செய்வதுமட்டுமே சரியான தீர்வாகாது. பதவிநீக்கியபின்பு சாதாரணகுடிமகன்போல் அவர்மீது வழக்குத்தொடர்ந்து அந்த பணம் எப்படி வந்தது என விசாரித்து உரிய தீர்ப்பு கொடுக்கப்படவேண்டும். அதோடு அந்த லஞ்சம் பெற்றதால் அவர் அளித்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவேண்டும். அது உண்மைக்கு புறம்பான நீதியாகத்தான் இருக்கமுடியும். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என நமது சட்டம் கூறும்பொழுது ஒரு குற்றவாளி தப்பிக்கக்கூடாது எனவும் இருக்கவேண்டும்.


பேசும் தமிழன்
ஜூலை 21, 2025 18:25

தண்டனை கொடுக்கும் நீதித்துறை.... கறை படியாமல் இருக்க வேண்டும்..... அப்போது தான் மக்களுக்கு அதன் மீது நம்பிக்கை வரும்.


spr
ஜூலை 21, 2025 18:20

பதவி நீக்கம் செய்தால் போதுமா அடுத்து விசாரணை தண்டனை இதெற்கெல்லாம் எத்தனை தடைகளுண்டோ ஒரு குடியாட்சியில் யாராயிருந்தாலும் குற்றம் செய்தாரென்றால் முறையான விசாரணையும் தண்டனையும் இருக்க வேண்டும் இதில் எவருக்கும் விலக்கு இல்லை குடியாட்சித் தலைவரோ ஆளுநரோ நீதிபதிகளோ தங்கள் கடமையைச் செய்யும் போது பிறர் அறிவுரை அல்லது வாதத்தின் அடிப்படையில் ஒரு முடிவெடுக்கிறார்கள் என்றால் அவர் எதனால் பிறர் அறிவுரையை ஏற்றார் என்று அறியஅதில் விசாரணை தேவை. அக்காலத்தில் அவர்களைத் தாற்காலிகமாகப் பதவி விலக்கு கூடச் செய்யலாம் அதனால் அவர்கள் தவறு செய்யும் வாய்ப்பு குறையும் தண்டனை இல்லாமலிருக்கலாம் இப்படியொரு சட்டத்திருத்தம் காலத்தின் கட்டாயம்


SP
ஜூலை 21, 2025 17:44

ஒரு ஊழல் நீதிபதியை நீக்குவதற்கு இத்தனை தடைகள் இந்த நாட்டு சட்டத்தில் உள்ளது என்றால் இது நாடா? இது உடனடியாக மாற வேண்டும்


visu
ஜூலை 21, 2025 19:25

நீதிபதிகளை அரசியல்வாதிகள் மிரட்டக்கூடாது என்பதெற்காக இந்த சட்டம் இப்போ காவல் நிலையங்களில் மரணம் ஏற்பட என்ன காரணம் காவலர்களுக்கு உள்ள அதிக அதிகாரம் அது போல நடந்தால் தீர்ப்புகளில் நியாயம் இருக்காது என்பதெற்க்கு ஒரு செக்


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2025 17:32

இதைவிட கேவலமான ஒரு சட்டம் இந்த உலகில் எந்த நாட்டிலும் இருக்கவே முடியாது. அவன் வீட்டில் பணமூட்டை ஆனால் அவனது அல்ல அது??என்னமா உடான்ஸ் இது???தவறு கண்டேன் சுட்டேன் இது ஒன்று தான் எனது சட்டம் அது தான் நாட்டின் நன்மைக்காக இருக்கும். இப்போது இருக்கும் சட்ட ஆட்டம் குற்றவாளிகள் ஏமாற்றுபவர்கள் பிழைப்பதற்க்காக செய்த சட்டமாக மிக மிக தெளிவாகத்தெரிகின்றது


J.Isaac
ஜூலை 21, 2025 17:19

எப்படி பணம் வந்தது மட்டும் ரகசியமாக உள்ளது. ஆளும்கட்சியும் மெளனம்


வாய்மையே வெல்லும்
ஜூலை 21, 2025 19:42

உங்க கபில் சிபல் வாதாடாமல் காசுகொடுத்து நீதிபதியை கரெக்ட் பண்ணி நீதி வாங்கியுள்ளார் என சொல்லாமல் சொன்னதற்கு ... மிக்க நன்றி சாரே..


D.Ambujavalli
ஜூலை 21, 2025 16:35

எத்தனை நீதிபதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறதோ? சிலர் இதற்குள் தங்கள் கைவசம் உள்ளதை எத்தனை பினாமிகளுக்கு மாற்றிவிட்டார்களோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை