உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களை அவமரியாதை செய்யும் அசுரன்; உத்தவ் கட்சி தோல்வியை விமர்சித்த கங்கனா ரனாவத்!

பெண்களை அவமரியாதை செய்யும் அசுரன்; உத்தவ் கட்சி தோல்வியை விமர்சித்த கங்கனா ரனாவத்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பெண்களை அவமரியாதை செய்யும் அசுரன் உத்தவ் தாக்கரே. இதுதான் அவரது கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம்' என பா.ஜ., எம்.பி.,யும், நடிகருமான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 'இண்டியா' கூட்டணிக்கு, 50 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதில் உத்தவ் தாக்கரே கட்சி 20 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இது குறித்து, மும்பையில் கங்கனா ரனாவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வியை நான் எதிர்பார்த்தேன். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக ஓட்டளித்த மஹாராஷ்டிரா மக்களுக்கு பாராட்டுகள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை சிறப்பாக உள்ளது.

அவமரியாதை

பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்களா என்பதைப் பொறுத்தே யார் கடவுள் மற்றும் அசுரன் என்பதை நாம் அடையாளம் காண முடியும். பெண்களை அவமரியாதை செய்யும் அசுரன் உத்தவ் தாக்கரே. இதுதான் அவரது கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். அவர்கள் என் வீட்டை இடித்துவிட்டு என்னை வார்த்தைகளால் திட்டினார்கள். இதுபோன்ற செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியும்.

பிராண்ட்

மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. பிரசாரத்தின் போது, ​​ஒவ்வொரு குழந்தையும் 'மோடி-மோடி' என்று கோஷமிடுவதை நான் பார்த்தேன். பிரதமர் மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர். பா.ஜ., என்பது ஒரு பிராண்ட். இந்த பிராண்டை இந்திய மக்கள் நம்புகிறார்கள். பிரதமர் மோடியை யாராலும் வெல்ல முடியாது என்று நான் நம்புகிறேன். நாட்டை பிளவுபடுத்த விரும்பும் தலைவர்களுக்கு தேர்தல் முடிவுகள் ஒரு பாடமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Indhuindian
நவ 25, 2024 14:35

That Shiv Sena under the leadership of Balasaheb vadalised tamilians and tamil speaking areas. Ghastly attack on a Bank in Chembur is an outstanding example of hate only because the bank had its headquarters in Chennai. That aside, had he been alive, he would have never joined the congress nor given up hindutva agenda for the sake of few seats and power. His son Uddhav threw all his principles to wind and aligned with those whom his father would not have touched even with a barge pole. He has to face a price for it and go into political oblivian


Kanns
நவ 25, 2024 14:11

Opportunist who was made Shortcut MP at Cost of PartyWorkers Speaking NonSense after FaceSaving EVM Fraud-Overturned Win against Peoples Mandate in recent Loksabha


Ramesh Sargam
நவ 25, 2024 12:54

பேசினால் இப்படி பேசவேண்டும். தமிழக நடிகை கஸ்தூரி போல ஏதாவது தாறுமாறாக பேசி சிக்கலில் சிக்கிக்கொள்ள கூடாது. இவரும் சில சமயம் தடுமாறுகிறார். பேச்சில் மாற்றம் வேண்டும் தடுமாற்றம் வேண்டாம்.


SVR
நவ 25, 2024 08:46

உத்தவுக்கு எதிராக பேசினார் என்று இவருடைய வீட்டை விதிகளுக்கு முரணாக கட்டி இருந்தார் என்று உத்தவ் இடித்தார். இதை கோர்ட்டும் நியாயமற்ற செயல் என்று சொன்னது. இண்டி கூட்டணிக்குத்தான் கோர்ட் உத்தரவு அலர்ஜி ஆயிற்றே. அவர்கள் அதற்கு காம்பென்சேஷன் கொடுக்கவில்லை. இப்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் எனது வேண்டுதலுக்கு இணங்க இண்டி கூட்டணிக்கு வோட்டு போடவில்லை. இன்னும் எத்தனை ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டுமோ தெரியவில்லை. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்கிற சொலவுக்கு ஏற்றாற்போல் முடிவுகள் வந்துள்ளன. ஜார்கண்டில் அம்மாநிலுத்து பழங்குடி மக்கள் இன்னும் பழங்குடி மக்களாகவே இருக்க பிரியப்பட்டு ஜேம்ம் மற்றும் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கிரார்கள். ஒன்றும் செய்ய முடியாது. அந்த மாநிலத்தில் கநிம வளங்கள் எப்படியெல்லாம் சூறையாடபடபோகிறதோ தெரியவில்லை. பார்ப்போம். உத்தவும் பிஜேபி யுடன் சேர்ந்து விடுவதுதான் அவருக்கும் நாட்டுக்கும் நல்லது.


Barakat Ali
நவ 25, 2024 08:39

பாஜகவை அங்கே மூழ்கடிக்க இவர் போதும் ......


Dharmavaan
நவ 25, 2024 08:15

இவரும்,ஸ்மித்தி இராணியும்தான் ராகுல்கானுக்கு தேசத்துரோக எதிரி கட்சிக்கு சரியான பதிலடி கொடுப்பவர்கள் பிஜேபி இவர்களை தடுக்க கூடாது


Priyan Vadanad
நவ 25, 2024 07:50

மாதம் பெண்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னால் யார் நம்புவது? அதானிக்கு தள்ளுபடி செய்த பணத்தை திரும்ப பெற்று விடலாம் என்கிற நப்பாசையா? எப்போது மேடையில் பேசினாலும் அதானி பற்றியும் அத்தனை லட்சம் கோடியை தள்ளுபடி செய்து விட்டார் மோடி என்று புலம்பிக்கொண்டிருந்தால் கோடிக்கு எத்தனை சைபர் என்று அறியாத பாவப்பட்ட மக்களுக்கு என்னதான், எப்படித் தான் புரியும்? மக்களுக்கு எந்த நலமான திட்டத்தை செய்வோம் என்று சொல்ல ஒன்றுமே இல்லை/ இப்படியிருக்க எப்படி இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியும்? காங்கிரசை நினைக்கும்போது வேஸ்ட் பெல்லோஸ் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.


முத்துவேல்,பரமக்குடி
நவ 25, 2024 08:51

இதுவரை நீ போட்ட கருத்துக்களில் இது ஒன்றுதான் உருப்படியான கருத்து.


Rpalnivelu
நவ 25, 2024 09:07

இத்தாலிய மாபியா போலி காந்திகள் நிறைந்த கட்சிக்கு தேவை புதிய தலைமை. போலி காந்திகள் இல்லா காங்கிரெஸ் வாழ்க


Duruvesan
நவ 25, 2024 13:53

same side கோல், நல்லாவே இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை