உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அழகு கொஞ்சும் நிலவில் அதிசயம் போல் ஒரு பழுது; அடடே சொல்ல வைத்த ஆய்வுப்படம் இதோ!

அழகு கொஞ்சும் நிலவில் அதிசயம் போல் ஒரு பழுது; அடடே சொல்ல வைத்த ஆய்வுப்படம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரபல வானியல் புகைப்படக் கலைஞர் எடுத்த நிலவின் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்திரயான்

நிலவு குறித்து இந்தியா மட்டுமல்லாது முன்னணி உலக நாடுகள் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஆக.,23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி, இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர். இந்த ஆய்வின் மூலம், நிலவில் அலுமினியம், குரோமியம், டைட்டானியம், இரும்பு, கால்சியம், சல்பர் போன்ற தனிமங்களும், தாதுப்பொருட்களும் இருப்பது தெரிய வந்தது.

வளர்ச்சி

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளி செயல்பாடுகளை உற்றுநோக்கும் அளவுக்கு இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது.

போட்டோ

இந்த நிலையில், வானியல் புகைப்பட கலைஞர் தர்யா காவா மிர்ஷா, நிலவை எடுத்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அது நெட்டிசன்களை வியப்படையச் செய்துள்ளது. நிலவின் செயல்பாடுகளை 4 நாட்களாக தொடர்ந்து கண்காணித்து, பின்னர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

விவாதம்

அதில், நிலவின் மேற்பரப்பில் துருப்பிடித்தது போன்று இருக்கும் காட்சிகள் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. ஒரு சிலர் இது உண்மையா...? அல்லது எடிட் செய்யப்பட்டதா...? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இரும்பு

சிலரோ, நிலவில் இருக்கும் இரும்பு மற்றும் பெல்ட்ஸ்பர் காரணமாக, இதுபோன்ற நிறத்தில் காட்சியளிப்பதாக விளக்கம் அளித்துள்ளனர். தற்போது, இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

subramanian
செப் 02, 2024 10:14

நீர், காற்று இருக்கிறது. ஆயா எங்கேயோ வடை செய்கிறார்.


God yes Godyes
செப் 02, 2024 09:39

நிலவை சுற்றி பரவியுள்ள வெண் பரல் பளிங்கு கற் குவியல்கள் இடையில் உள்ள படிவப் பாறைகளில் இது போன்ற மங்கல் கலரில் பூமியிலிருந்து நிலவு பிரிந்த போது சேர்ந்த மண் தூள்கள் படிமானமாக இருக்கலாம். ஏண்டா எதையாவது எவனாவது கண்டு புடிச்சா அதுக்கு கண்டபடி பேர் வக்கிறீங்க.


Ganesh Subbarao
செப் 02, 2024 11:33

முடிஞ்சா .....பேரு வச்சிக்கோ


சமீபத்திய செய்தி