மேலும் செய்திகள்
பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் துவக்கம்
02-Jul-2025
பாலக்காடு:பாலக்காடு அருகே, காரில் இருந்த 'காஸ் சிலிண்டர்' தீப்பிடித்து வெடித்ததில், தாய், மூன்று குழந்தைகள் படுகாயமடைந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் பொய்ப்புள்ளியை சேர்ந்த மார்ட்டின் மனைவி எல்சி, 40; தனியார் மருத்துவமனை செவிலியர். இவர்கள் குழந்தைகள் அலீனா, 10, ஆல்பின், 6, எமின், 4.நேற்று காரில் வேலைக்கு சென்று, மாலை, 6:45 மணிக்கு எல்சி வீடு திரும்பினார். வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும் ஓடி வந்து காரில் ஏறியுள்ளனர். காரில் பொருத்தப்பட்டிருந்த 'காஸ் சிலிண்டர்' திடீரென தீப்பிடித்து வெடித்தது.படுகாயமடைந்த நான்கு பேரையும், அப்பகுதி மக்கள் மீட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சித்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Jul-2025