மேலும் செய்திகள்
பொது இடத்தில் குப்பை ரூ.2.54 கோடி அபராதம் வசூல்
17-Dec-2024
அபராத வரி விதிப்பு; மக்கள் அதிர்ச்சி
01-Jan-2025
மைசூரு: முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரின் அருகே உள்ள கிராமத்தில் ஊரைவிட்டு தாயும், மகனும் தள்ளிவைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது.முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர் மைசூரு தாலுகா வருணா அருகே உள்ள சித்தராமயனஹூண்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது சீனிவாசப்பூர் கிராமம்.இந்த கிராமத்தில் வசிப்பவர் மகாதேவம்மா. இவரது மகன் சுரேஷ். இவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சுரேஷுக்கும், பிரமோத் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. சுரேஷ் வீட்டிற்குள் புகுந்த பிரமோத் குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்.இப்பிரச்னை ஊர் பஞ்சாயத்துக்கு சென்றது. பிரமோத்துக்கு 25,000 ஆயிரம் ரூபாய்; சுரேஷுக்கு 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட சுரேஷ் மறுத்தார்.“நான் எந்த தவறும் செய்யவில்லை,” என, சுரேஷ் கூறினார். கோபம் அடைந்த பஞ்சாயத்து தலைவர்கள் சுரேஷையும், அவரது தாயையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். 'அபராதம் கட்டும் வரை ஊருக்குள் வர கூடாது' என்று உத்தரவிட்டனர். 'சுரேஷுடன் பேசுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி மைசூரு மாவட்ட கலெக்டர், போலீஸ் துறை, தாசில்தாரிடம் சுரேஷ் பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.முதல்வரின் சொந்த ஊரின் அருகே, இச்சம்பவம் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
17-Dec-2024
01-Jan-2025