உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்கூட்டர் கவிழ்ந்து தாயும், மகனும் பலி

ஸ்கூட்டர் கவிழ்ந்து தாயும், மகனும் பலி

பாலக்காடு:பாலக்காடு அருகே, கட்டுப்பாடு இழந்து ஸ்கூட்டர் கவிழ்ந்ததில், தாயும், மகனும் உயிரிழந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாட்டுமந்தை என்.கே.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி அஞ்சு, 26. இவர்களது இரண்டு வயது ஆண் குழந்தை ஸ்ரீஜன்.இந்நிலையில், அஞ்சு, மகன் ஸ்ரீஜன் மற்றும் தோழி சூரியலட்சுமியுடன், ஸ்கூட்டரில் ஒற்றைப்பாலம் பகுதியிலுள்ள சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடமான வரிக்காசேரி மனைக்கு 'ரீல்ஸ்' எடுப்பதற்காக, பாலக்காடு- - பட்டாம்பி சாலையில் சென்றனர்.மதியம், 12:45 மணிக்கு, கல்லேக்காடு கிழக்கஞ்சேரி பகவதி அம்மன் கோவில் அருகே, காட்டுப்பாடு இழந்து ஸ்கூட்டர் சாலையோரம் அடுக்கி வைத்திருந்த குழாய்கள் மீது மோதியது. இதில், தலையில் அடிபட்டு அஞ்சுவும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சூரியலட்சுமியை அப்பகுதி மக்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் மேற்கு போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
மே 03, 2025 06:32

ரீலிஸ் மோகம் என்றுதான் ஒழியுமோ?


m.arunachalam
மே 03, 2025 05:49

சிறிய அளவிலே வசதி வந்தால் உடனே ரீல்ஸ் மற்றும் பல வெட்டி வேலை செய்ய இந்த பெண் இனம் அலைய ஆரம்பித்துவிட்டது . சமூக சீர்கேடு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை