உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு நிராகரிப்பு!

கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு நிராகரிப்பு!

புதுடில்லி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இந்த கோரிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து, அவருக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு நீடித்து வருகிறது. கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது போன்ற விவகாரங்களில் தமிழக அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qw3h207n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் கவர்னர், தன் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதன் வாயிலாக கவர்னர், தன் பதவிக்கான பணிகளை செய்ய மறுத்து இருக்கிறார். மேலும், தமிழக மக்களையும் அவமரியாதை செய்துள்ளார். எனவே, தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை உடனடியாக பதவியில் இருந்து திரும்ப அழைத்துக்கொள்ளும்படி, ஜனாதிபதியின் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை படித்துப் பார்த்த தலைமை நீதிபதி அமர்வு, 'இதுபோன்ற மனுக்களை இந்த நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மனுவில் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் விசாரணைக்கு ஏற்புடையதல்ல. நாங்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்படக்கூடியவர்கள். 'ஆனால், மனுதாரர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் அரசியலமைப்பு நடைமுறைக்கு எதிராக இருக்கிறது. எனவே இந்த வழக்கை விசாரிக்க முடியாது' எனக்கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Matt P
பிப் 06, 2025 09:47

குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு பதவியேற்ற ஆளுநரை நீக்க மனு கொடுக்கலாம் என்றால் ஸ்டாலின் உதயநிதியையும் பதவி நீக்க கோரலாம். சட்ட,mantra உறுப்பினர் என்பதற்காக அவர்கள் தான் முதலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில் வேறு சட்ட மன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்களே.


krishna
பிப் 04, 2025 17:36

YAARU VENA ONNUKKUM UDHAVAADHA THARPERUMAI PHOTO SHOOT URUTTU THURU PIDITHA IRUMBU KARAM PADHAVI VILAGA COURT SELLALAAM.IPPADI CASE FILE SEIDHAVAR MIGA PERIYA MUTTAL.


sridhar
பிப் 04, 2025 16:37

ஒருபக்கம் ' இந்த ஆளுநரே இருக்கட்டும் அப்போதுதான் மக்கள் எங்களுக்கு வோட்டு போடுவாங்க ' என்பது . மற்றொரு பக்கம் ஆளுநரை நீக்க மனு கொடுப்பது . கீழ்பாக்கம் கேஸ் போல .


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 04, 2025 20:11

இனி அல்சைமரின் பிடிக்கு ஆளாக நேரிடும் ..........


M Ramachandran
பிப் 04, 2025 16:22

ஸ் டாலின் எவ்வளவு தரும் மூக்கறு பட்டாலும் அதே தப்பையே மீண்டும் மீண்டும் செய்கிறார். செயலிழந்த குடும்ப அரசியல் அரசாங்கம்.


Velan Iyengaar
பிப் 04, 2025 16:10

இன்று மூன்று மணிக்கு இதே உச்சநீதிமன்றம் இதே கெவுனர் மீது மசோதாக்களை சீட்டுக்கு கீழே போட்டுவைத்து அடைகாப்பதற்கு கண்டனம் தெரிவித்தது குறித்து இங்கு இதுவரை செய்தி போடவில்லை .....


Kjp
பிப் 04, 2025 19:32

சற்று முன் வந்த செய்தியை பார்த்தீர்களா வேலன்.நீதி மன்றம் உங்கள் போலீஸ் துறையை குட்டுக்கு மேல் குட்டு என குட்டியுள்ளது.கவர்னர் இருக்கட்டும் என்று சொல்லி விட்டு புலம்புகிறீர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 04, 2025 20:07

கட்டளைக்குப் பணிவதால் காவல்துறைக்கு எங்கும் இடி ..... எங்கும் அவமானம் .... எங்கும் அசிங்கம் .....


Saai Sundharamurthy AVK
பிப் 04, 2025 14:36

அரசியலமைப்பிற்கு எதிராக வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அந்த திமுக மனுதாரருக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்க வேண்டும்.


K.J.P
பிப் 04, 2025 14:17

ஆமையும் முயல் கதை ஆகி விடும் வாக்கு சதவீதம் 28 வைத்துக் கொண்டு தனியாக நின்று ஜெயித்து காட்ட முடியாது.மக்கள் உங்கள் பக்கம் என்றால் அடுத்த கட்சிகளின் உதவி இல்லாமல் ஜெ மாதிரி தனியே நின்று ஜெயித்து காட்ட முடியுமா?


Madras Madra
பிப் 04, 2025 14:12

ஹி ஹி எங்களுக்கு வலிக்கலையே


guna
பிப் 04, 2025 13:56

எம்மாம் பெரிய கருத்து போட்டாலும், இங்கே மக்கள் திமுக மீது ... நிறுத்தவில்லை...முதலில் அதை துடைக்கும் வேலையை பார் திராவிட சொம்பே. ...


guna
பிப் 04, 2025 13:41

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.....


சமீபத்திய செய்தி