உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிருக்கான உதவித்தொகை உயர்த்தினார் ம.பி., முதல்வர்: ராக்கி பரிசாக ரூ.250

மகளிருக்கான உதவித்தொகை உயர்த்தினார் ம.பி., முதல்வர்: ராக்கி பரிசாக ரூ.250

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை வரும் அக்டோபர் முதல் 1,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், அதற்குமுன் 'ரக்ஷாபந்தன்' தினத்தையொட்டி 250 ரூபாய் ராக்கி பரிசாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு உஜ்ஜைனி மாவட்டத்தில் நல்வா என்ற பகுதியில் அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது:சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் விழா, வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 2023 ஜூனில் அறிமுகம் செய்யப்பட்ட, மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பலன் பெறும் 1.27 கோடி பெண்களுக்கும், அதற்கு முன்பாக 250 ரூபாய் அரசு சார்பில் ராக்கி பரிசாக அளிக்கப்படும்.இதேபோல் இத்திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் இது, 1,500 ரூபாயாக அதிகரிக்கப்படும். படிப்படியாக, இந்த உதவித்தொகை 3,000 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூலை 14, 2025 10:44

இப்பிடி எலும்புத் துண்டை அதிகமாக்கி வீசிப்போட்டுக்கிட்டே போகணும்.


Anantharaman Srinivasan
ஜூலை 14, 2025 00:53

மாநிலத்தை நேர்மையாக ஒழுங்காக ஆட்சி செய்து மக்ககளின் ஆதரவை பெருக்கிக்கொள்ள வக்கற்ற ஆட்சியாளர்கள் குறுக்கு வழியில் மகளிர் ஓட்டுக்களை பிடுங்க வரி செலுத்துவோரின் பணத்தையெடுத்து அநியாயமாக உதவித்தொகையென்று வழங்குகின்றனர். அரசு கஜானா திவால். இந்த அநியாயத்தை யார் கேட்பது..?


Jack
ஜூலை 14, 2025 06:20

அரசாங்கம் மது விற்பனை செய்யும்போது இது மட்டும் அநியாயமாய் தென்படுகிறதா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை