உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள்

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த, காங்., - எம்.பி., சசி தரூர், தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்ட ஏழு எம்.பி.,க்கள் தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், விரைவில் பல்வேறு நாடுகளுக்கு செல்லஉள்ளனர். இந்நிலையில், வெளி நாடுகளுக்கு செல்லும் எம்.பி.,க்கள் குழுவினரை சந்தித்த மத்திய அரசு அதிகாரிகள், பாகிஸ்தானின் நேரடி மற்றும் மறைமுக பயங்கரவாத ஆதரவுக்கு உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் நாட்டு மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள், சந்தித்த பிரச்னைகள் குறித்த தகவல்களையும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை எல்லாம் தொகுத்து, வெளி நாடு செல்லும் எம்.பி., குழுக்களிடம், அதிகாரிகள் வழங்கி உள்ளனர். மேலும், சிந்து நதி நீர் விவகாரத்தில் நாடகமாடும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவும் எம்.பி.,க்கள் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
மே 21, 2025 11:34

அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை. நம்ம பிரச்சனையை காது குடுத்து கேக்கப் போறாங்களாக்கும்? எல்லிருக்கும் வெளிநாட்டு டூர் போக சான்ஸ்.


Sakthi,sivagangai
மே 21, 2025 18:17

அப்படியே அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க வேண்டியதானே!


முதல் தமிழன்
மே 21, 2025 09:02

இதனால்.ஒரு பயனும் இருக்காது என்பது ஏன் கருத்து. பணம் செலவு அவ்வளவே. சிலர் சொகுசு பயணம். மற்றபடி நமது அரசு இன்னும் பலமாக அடிக்க வேண்டும். போர் நிறுத்தம் தேவையில்லை.கதறி அழுவுற வரை அடிக்கணும். நாம் ஏன் மற்ற நாடுகளுக்கு விளக்கம் கொடுக்கணும். அவங்க அப்படி நம்மை மதிக்கிறாங்களா? இல்லையே. அமெரிக்கா மாதிரி ஒரு மிக பெரிய விஷ ஐந்து வேற ஏதும் உண்டா? அடிக்கிற அடியில எல்ல நாடும் நம்மை கெஞ்சனும்.


தமிழன்
மே 21, 2025 07:03

கனிமொழி பாகிஸ்தான் ஆதரவாளர் எனவே கனிமொழியை இந்த குழுவில் இருந்து நீக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை