உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா மீது சபாநாயகரிடம் எம்பிக்கள் புகார்

ஏர் இந்தியா மீது சபாநாயகரிடம் எம்பிக்கள் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா மீது புகார் தெரிவித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எம்.பி.,க்கள் கடிதம் வழங்கியுள்ளனர்.திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர்ட் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டில்லி புறப்பட்டனர். அப்போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான காற்றழுத்தம் ஏற்பட்டது. இதனால், விமானத்தை சென்னைக்கு திருப்புவதாக விமானி அறிவித்தார்.சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்த நிலையில், விமானம் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால், விமானத்தில் இருந்த எம்பிக்கள் உள்ளிட்ட பயணிகள் பீதியடைந்தனர். இது தொடர்பாக கேரள எம்பிக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதனை ஏர் இந்தியா மறுத்துஇருந்தது.இந்நிலையில், எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில் ஏர் இந்தியா மீது உரிமை மீறல் புகார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Natarajan Ramanathan
ஆக 12, 2025 21:51

ஓசியில் பயணம் செய்யும் எல்லாம் உரிமை எங்கிருந்து வரும்?


Varadarajan Nagarajan
ஆக 12, 2025 18:02

இவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள் ஓடுபாதையில் ஒரு விமானம் இருக்கும்போது இந்த ஏர் இந்தியா விமானத்தையும் தரையிறக்கியிருக்கவேண்டும் என்கிறார்களா? அவசர காரணங்களுக்காக விமானம் தரையிறங்குமுன் பாதுகாப்பு காரணத்திற்காக அதிகப்படியாகவிமானத்தில் இருக்கும் எரிபொருளை வெளியேற்ற வானில் வட்டமடிப்பது அல்லது மனித குடியிருப்பு அல்லாத பகுதியில் எரிபொருளை வெளியேற்றுவது என்பது வாடிக்கையான நடவடிக்கைதான். கடற்கரையில் சென்னை அமைந்திருப்பதால் விமானத்தின் எரிபொருளை இந்திய கடல்பகுதியின்மேல் வெளியேற்றுவது எப்பொழுதும் நடைமுறையிலுள்ள விஷயம்தான். இதற்க்கு முன்பும் பலமுறை இதுபோல் நடந்துள்ளது.


Jack
ஆக 12, 2025 17:31

இலவச பயணம் ..தானம் கொடுத்த மாட்டை பல்ல பிடிச்சு பாக்கறது என்பது இது தானா ?


ديفيد رافائيل
ஆக 12, 2025 17:27

மக்களுக்கு ஏதாவது பிரச்சினையென்று சபாநாயகரிடம் மனு கொடுக்க மாட்டேங்குறாங்க.


Ganapathy
ஆக 12, 2025 17:21

மோதியை பயந்தாங்கொள்ளி என வர்ணித்த பியங்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதுக்கே கழிவதேன்?


எவர்கிங்
ஆக 12, 2025 16:19

உறுப்பினர்கள் ஒன்றும் உரிமை மீரல் கேட்குமளவு புனிதர்கள் இல்லை....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை