உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா மீதான வழக்கு: ரூ.300 கோடி மதிப்பு சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

சித்தராமையா மீதான வழக்கு: ரூ.300 கோடி மதிப்பு சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீதான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சிலரின் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில், நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.300 கோடி மதிப்புள்ள 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜன 18, 2025 09:06

எந்த ஒரு ஆதாரமும் இல்லாம பசி, அணிலை கைது செஞ்சு சொத்துக்களை முடக்கினாங்க. கடைசியில் அவிங்க ஒத்துழைக்கலைன்னு கேஸ் நீர்த்து போகுது. தத்திகள் ஆதாரங்களை முதலில் சேகரித்து தப்பிக்க முடியாமல் செய்யணும். ஆ.. ஊ ந்னா சொத்துக்களை முடக்க வேண்டியது. சொத்துக்கள் அவிங்க கிட்டே இன்னும் சேஃபா இருக்கும்.


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:02

இதெல்லாம் விடியல் கோஷ்டி பண்டைக்காலத்தில் செய்தது... இன்று, அதுவும் ஊழல் செய்வதில் கொட்டை போட்ட காங்கிரஸ் இப்படி செய்வது அடுக்காது...


R. SUKUMAR CHEZHIAN
ஜன 17, 2025 22:44

என்ன அநியாயம் ஒரு காங்கிரஸ் காரருக்கு 300 கோடி ஊழல் செய்ய கூட உரிமையில்லையா. இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது என தெரியவில்லையே. எங்க திராவிட கும்பல்களை சேந்த இரசா எப்படி மாட்டிக்கொள்ளாமல் உங்களை விட பல மடங்கு விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளார் என பார்த்து கத்துக்கோ.


Ramesh Sargam
ஜன 17, 2025 22:07

இதுவரை ஊழல்களில் ஈடுபட்ட எத்தனை அரசியல்வாதிகள் இந்தியாவில் கடுமையாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள்? யாராவது கூற முடியுமா? ஆனால் ஒரு உண்மை சொல்லட்டுமா உங்களுக்கு. சிறு சிறு குற்றம் புரிந்தவர்கள் நம்நாட்டில் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். யாராவது மறுக்கமுடியுமா?


Rajan A
ஜன 17, 2025 21:28

சும்மா, அடுத்த வருடம் கோர்ட் விடுவித்து விடும். டைம் வேஸ்ட்


Barakat Ali
ஜன 17, 2025 21:23

கம்மிதான் .... பாஜகவுக்கு லம்ப்பா இதைவிட பலமடங்கு கட்டிங் கொடுத்துருப்பீங்க .... சிவகுமார் தமிழக கோவிலுக்கு வந்தது இதுக்குத்தானோ ? அவர் கர்நாடகத்தின் ஓபிஎஸ் .....


அன்பே சிவம்
ஜன 17, 2025 21:20

1).நாட்டில் congress மறைந்து போனால்தான் இரண்டு நல்ல விசயங்கள் நடக்கும். 2).ஒன்று உண்மையான சுதந்திரம் கிடைக்கும் மற்றும் இன்னும் நம்மை ஆட்டுவிக்க நினைக்கும் மேலை நாடுகளின் சதிகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். 3). ஊழல், பொய், மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி, சாதி மற்றும் மதகலவரங்கள் போன்ற செயல்கள் ஒழிந்து புது வாழ்க்கை இந்தியர்களுக்கு கிடைக்கும். 4). மக்கள் மற்றும் நீதிமன்றங்கள் மனது வைத்தால் இது சாத்தியமே.


நிக்கோல்தாம்சன்
ஜன 17, 2025 21:10

அதானே பார்த்தேன் திடீரென dk சுரேஷ் , ரெங்கநாத் எல்லாரும் சுறுசுறுப்பாயிட்டாங்களே என்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை