உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள விரார் கிழக்கில் ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது. இங்கு 4வது மாடியில், நேற்று ஓம்கார்,25, ஆரோஹி,23, தம்பதியினர் தனது ஒரு வயது குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடி கொண்டு இருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, அவரது தாயார் உட்பட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. ஒரு தம்பதியினர் மகிழ்ச்சி பிறந்த நாள் கொண்டாடிய போது இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
ஆக 29, 2025 06:15

ஒரு காலத்துல பழய வீடுகள் எத்தனையோ வருடங்களுக்கு வருமாறு கட்டிக் கொடுத்தார்கள் சாமி. அதில் கட்டிமுடித்த வருடமும் பொறிக்கப்படும். ஆனால் தற்பொழுது பணத்திற்காக ஏனோதானோ என்று கட்டிக் கொடுக்கும் சுயநலவாதிகள் அதிகமாக உள்ளதால் மற்ற உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.


அப்பாவி
ஆக 28, 2025 15:22

நேரு கட்டுன பில்டிங் ஹை.


sivakumar
ஆக 28, 2025 13:29

அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல


Rameshmoorthy
ஆக 28, 2025 12:42

Government has the data as to the age of the buildings and need to check the strength regularly to avoid these accidents, can the government action now??


முக்கிய வீடியோ