மும்பை: மும்பையில் நேற்று காலை முதல் இடைவிடாமல் கன மழை கொட்டுகிறது. விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இன்றும் புதன்கிழமை ) மும்பையில் அதி கன மழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8d05mdex&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிராவில் முன் எப்போதும் இல்லாத அளவு இம்முறை கனமழை கொட்டித் தீர்க்கிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.வானிலை மையம் எச்சரிக்கை(நேற்று )செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு வானிலை மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை: மும்பையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை தொடர்ந்து பெய்யும்.கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மும்பை, தானே, பால்கர், ராய்கட், ரத்னகிரி மாவட்டங்களில் கனமழை, சூறாவளி வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.அடுத்த 48 மணி நேரம் முக்கியம்முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இன்று மழை வெள்ள நிலவரம் பற்றி பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ''அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் அதிகபட்ச உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார். இன்றும் (ஆக.20) அதி கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது விமானங்கள் தாமதம்கனமழை காரணமாக மும்பையில் இருந்து இன்று புறப்பட வேண்டிய 253 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. மும்பை வர வேண்டிய 163 விமானங்கள் இன்னும் வந்து சேரவில்லை.6 இண்டிகோ விமானங்கள், ஒரு ஸ்பைஸ் ஜெட், ஒரு ஏர் இந்தியா விமானங்கள், சூரத், அகமதாபாத், ஐதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.பயிர்கள் நாசம்நந்தீத் மாவட்டத்தில் மட்டும் மேகவெடிப்பு போன்று வெள்ளம் வந்ததால் 8 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் 12 முதல் 14 லட்சம் ஏக்கரில் பயிர்கள் நாசம் ஆகியுள்ளன: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்வீட்டில் இருந்தே வேலைமும்பை மாநகராட்சி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுவதாக, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.''அவசியம் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.ரயில்வே வேண்டுகோள்தொடர்ந்து கனமழை பெய்வதாலும், தண்ணீர் தேக்கம் இருப்பதாலும், அவசியம் இருந்தால் மட்டும் பயணிக்கும்படியும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் மும்பைவாசிகளுக்கு ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகி உள்ளது. அதிகளவாக விர்க்ஹோலியில் திங்கட்கிழமை மட்டும் 139.5 மிமீ மழை கொட்டியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. இடைவிடாத மழை எதிரொலியாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. இந்த தேர்வுகள் ஆக.23ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
தாதர் நகரம், கிங் சர்க்கிள் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து காணப்படுகிறது. மழை மற்றும் வெள்ளநீரில் பலமணி நேரம் வாகன ஓட்டிகள் தவித்தபடியே இருக்கும் சூழல் உள்ளது. அந்தேரி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ரயில், விமான சேவைகளும் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
வரலாறு காணாத மழையை சந்தித்து வருவதால், மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே என பல நகரங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி எங்கும் பயணிக்க வேண்டாம், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மும்பை நகர்ப்பகுதியில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்);விர்க்ஹோலி - 194.5சாந்தாக்ரூஸ் - 185ஜூஹூ - 173.5பைகுலா - 167பாந்தரா - 157கொலாபா - 79.8மஹாலக்ஷ்மி - 71.9
மூழ்கியது விமான நிலைய ஓடுபாதை:மும்பை விமான நிலைய ஓடுபாதை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விமானங்கள் தரை இறங்கவோ, புறப்படவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இண்டிகோ வெளியிட்ட அறிக்கை:கனமழை
பெய்வதாலும், விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும், மும்பையில்
விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சிரமத்துக்கு
மிகவும் வருந்துகிறோம். எங்களது இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக
நிலவரத்தை அறிந்து கொள்ளுமாறு பயணிகளை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு இண்டிகோ தெரிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து
காலை முதலே கனமழை தொடர்வதால், 14 நீண்ட தொலைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 16 மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 6 ரயில்கள் பாதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 ரயில்கள் வேறு வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
500 பேர் வெளியேற்றம்
மும்பை மாநகரம் வழியாக பாயும் மிதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றில் அபாய அளவை காட்டிலும் அதிகமாக வெள்ள நீர் பாய்கிறது. தாழ்வான பகுதிகளில் வசித்த 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்று முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக, பண்ட்ரா கர் லிங் ரோடு, செம்பூர், வாசை விரார் மற்றும் சுனபட்டி பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. அரசு மீது குற்றச்சாட்டு
உத்தவ் தாக்கரே கட்சி தலைவரான ஆதித்யா தாக்கரே கூறுகையில், ''மகாயுதி அரசின் தோல்வியே, மழையில் மக்கள் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் செயலற்ற தன்மை அம்பலமாகியுள்ளது,'' என்றார்.