உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவு: முதலீட்டாளருக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவு: முதலீட்டாளருக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு

மும்பை: சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிவை சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள்( 1.24%) சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகமானது. சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் இன்போசிஸ், ஐடிசி, எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை சரிவை சந்தித்தன.நிப்டியில் வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு , ஆட்டோ, வங்கி நிதிச் சேவைகள், நுகர்பொருள் துறைகள் சரிவை சந்தித்தன.சென்செக்சில், இன்றைய வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.5.31 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Govindan.G
செப் 07, 2024 19:46

உனக்கு தெரியலைனா ஏன் மத்தவனை குறை சொல்ற...


RAMAKRISHNAN NATESAN
செப் 07, 2024 01:24

பங்குச் சந்தை வணிகம் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்தான் இதை அசாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள் ....


Corporate Goons
செப் 06, 2024 19:57

பல கோடிக்கணக்கான கோடிகள் நாட்டில் பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் சூறையாடப்பட்டுள்ளன . மோடியையும் மோடி கும்பலையும் கூண்டிலேற்றும் காலம் இது .


Duruvesan
செப் 06, 2024 21:57

லாபம் வந்தது அதுக்கு, investor எனக்கு எப்போ எங்க எப்படின்னு தெரியும்


J.Isaac
செப் 06, 2024 19:42

சூதாட்டம்


Barakat Ali
செப் 06, 2024 19:11

வெள்ளிக்கிழமை என்பது விதி .... விதிவிலக்கன்று ...


Ramarajpd
செப் 06, 2024 18:47

இதில் இழப்பு என்ன திரும்பவும் மேலே வந்து விடும். ஆயிரம் புள்ளி கீழே இறங்கும் என தெரிந்தவர்கள் short sell கொடுத்து இருப்பார்கள். அவர்களுக்கு இதில் லாபம் தான் ??


Duruvesan
செப் 06, 2024 21:59

ஆமாம் லாபம் பார்த்தேன்,PE வாங்கினேன், Btst 24800 pe 1000 வாங்கி இருக்கேன், ?


ஆரூர் ரங்
செப் 06, 2024 18:39

460 லட்சம் கோடில 5 லட்சம் கோடி ரூ எத்தனை சதவீதம் இழப்பு?.


சமீபத்திய செய்தி