உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் பயணிகள் 5 பேர் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு

மும்பையில் பயணிகள் 5 பேர் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே உறுதி அளித்துள்ளது. தானேவில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அடுத்த தானேவில் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்து உள்ளது. தற்போது மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ராகுல் குற்றச்சாட்டுமும்பையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:பா.ஜ., அரசு தனது 11 ஆண்டுகள் ஆட்சி நிறைவை கொண்டாடும் அதே வேளையில் மும்பையில் இருந்து வரும் துயரச் செய்திகளில் நாட்டின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. பலர் ரயிலில் இருந்து விழுந்து இறந்தனர்.இந்திய ரயில்வே கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமானதுமஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: தானேவில் ரயிலில் இருந்து மொத்தம் பயணிகள் 8 பேர் தவறி விழுந்து, அவர்களில் சிலர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.காயமடைந்தவர்கள் உடனடியாக சிவாஜி மருத்துவமனை மற்றும் தானே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
ஜூன் 10, 2025 09:01

சென்னை மவுண்ட் ஸ்டேஷன் விபத்து போல முதுகுப் பை இடித்து நடந்த விபத்து இது என்பது தற்போதைய செய்தி. முதுகுப் பை கும்பல் செய்யும் அட்டகாசம் கையில் ஸ்மார்ட் போன் வைத்து கொண்டு செய்யும் அலப்பறை மிக அதிகம். முதுகுப் பை மூலம் உதிரி விபத்துகள் அதிகம் நடந்துள்ளன...முதுகுப் பை பயன்பாடு குறைக்க பட வேண்டும்


R K Raman
ஜூன் 09, 2025 22:49

ரா கா தம்பி, நம்ம ஆட்சியில் என்ன‌கிளிச்சோம்னு ஞாபகப் படுத்திக்க...நீ ஒரு சட்டம் சம்பந்தப்பட்ட பேப்பரை கிழிச்சதைத் தவிர...


தமிழ்வேள்
ஜூன் 09, 2025 21:21

ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கண்டமேனிக்கு கடைகளும் வியாபாரமும் எதற்கு? வெட்டி கும்பல் தான் ரயிலில் ஏறாமலும் வெளியே போகாமலும் நெரிசலைக் கூட்டுகிறது... பயணச்சீட்டு இல்லாமல் யாரையும் ஸ்டேஷனுக்குள் அனுமதிக்க வேண்டாம்... பிளாட்பாரம் டிக்கெட் முறை தேவையற்றது.. ரயில் பயணங்களில் படம் பார்த்து பாட்டு கேட்டு பேசிப்பேசி சாகும் கும்பலை கன்ட்ரோல் செய்ய டேட்டா சர்வீஸ் தடை தேவை....


Ramesh Sargam
ஜூன் 09, 2025 20:47

பல உயிர்களை பலி கொடுத்தபின் ஞானோதயம்.


நல்லதை நினைப்பேன்
ஜூன் 09, 2025 19:53

95-98% will be season ticket holders. others without ticket.


ஈசன்
ஜூன் 09, 2025 19:15

உயிரிழந்தவர் அனைவரின் ஆன்மா சாந்தியடையட்டும். தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல படிகளில் தொங்கியபடி செல்வது எத்தகைய ஆபத்தானது என்பதை இனியாவது மக்கள் உணர வேண்டும். இது போல துயர நிகழ்வுக்கு காத்திருந்தது போலவே ராகுல் புலம்புகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று யாரும் பயணம் செய்யவில்லையா! ஏதோ மோடியின் ஆட்சியில் தான் இப்படி நடப்பது போல உளறியிருக்கிறார் ராகுல். மும்பை புறநகர் ரயில்களில் மக்கள் இப்படிதான் 50 வருடங்களாக பயணிக்கிறார்கள். இது ராகுலுக்கு தெரியாதா. இப்போது நீலி கண்ணீர் வடிக்கும் ராகுல், ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் வைக்க பட வேண்டும் என்று எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறாரா. இனி பாருங்கள். இறந்தவர்களின் குடும்பங்களை இனி ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறி வருவார். மிகவும் மட்ட ரகமான அரசியல் செய்வார்.


Vel1954 Palani
ஜூன் 09, 2025 18:52

வெஸ்டர்ன் ரயில்வே கோடை காலங்கள் மற்றும் விழா களங்களில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் . பீக் ஹவர்ஸில் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் புறப்படுவதை அமல் படுத்தி கூட்ட நெரிசலை ஓரளவு தவிர்க்கலாம் .


chennai sivakumar
ஜூன் 09, 2025 17:53

Instead of controlling population growth strictly all these measures are only temporary. When I went to Mumbai in 1976 the situation was the same but at that time meter gauge compartment in local trains. Now broad gauge compartments. Thats the only difference. Falling from the mumbai train is a regular news. Nothing to be surprised about.


GMM
ஜூன் 09, 2025 17:37

ரயில் தானியங்கி கதவு ஒரு பாதுகாப்பு. பயண சீட்டு ரயில் இட வசதிக்கு ஏற்ப வழங்க வேண்டும். பஸ் போல் சில ரயில் நுழைவு அருகில் வங்கி பரிவர்த்தனை upi மூலம் ஒருவர் டிக்கெட் வழங்க வேண்டும். பணம் பெற்றால் தாமதம் ஆகும். கூடுதல் சில நிமிடம் நிற்கும் நிலை வரும். பயணிகள் அதிகம் பேர்கள் என்றாலும், வரிசையில் சென்று, ஒழுங்காக வெளி வர ரயில் நிலையம் வடிவமைக்க வேண்டும். 24 மணிநேர வேலை. ஓய்வு பெற்ற அலுவலர்கள் சில ஆண்டுகள் குறைந்த சம்பளத்தில் நியமிக்கலாம். பஸ் நிலையம் முதல் ரயில் நிலையம் வரை மாநில போக்கு வரத்து மூலம் ரயில் வரும் நேரத்தில் ஓட்ட வேண்டும். அல்லது ரயில் நிர்வாகம் இயக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 22:54

90 -95 சதவீத பயணிகள் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். எண்ணிக்கையை முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒவ்வொரு ஸ்டேஷனில் 10 வினாடிகள் நிற்கும் ரயிலில் தானியங்கி கதவுகள் சரிவருமா?


Drarb Bhat
ஜூன் 09, 2025 17:34

Its really pathetic, why wait for this sorrow news, govt should act in 2 ways. 1 is on safer journey, 2nd is on proper labor migration. Mumbai is too full


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை