உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்சி டிரைவர்களின் துன்புறுத்தல் அனுபவம்: வலைதளங்களில் பகிர்ந்த மும்பை பெண் பயணி

டாக்சி டிரைவர்களின் துன்புறுத்தல் அனுபவம்: வலைதளங்களில் பகிர்ந்த மும்பை பெண் பயணி

மூணாறு: மூணாறில் டாக்சி டிரைவர்களின் துன் புறுத்தலால் அனுபவித்த மோசமான அனுபவத்தை மும்பை சுற்றுலா பெண் பயணி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இச் சம்வத்தில் ஏ.எஸ்.ஐ., கிரேடு எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மும்பையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜான்வி என்ற பெண், நண்பர்களுடன் மூணாறுக்கு அக்.,30ல் சுற்றுலா வந்தார். அவர், மூணாறில் ஆன்லைன் டாக்சியை தொடர்பு கொண்டபோது, உள்ளூர் டாக்சி டிரைவர்கள் சிலர் ஜான்வியை மிரட்டியதுடன் டாக்சியை வர விடாமல் தடுத்தனர். அதனால் போலீசாரையும், சுற்றுலாதுறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டார். அவர்கள் டாக்சி டிரைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், மிரட்டிய டிரைவர்களின் காரில் செல்ல அறிவுறுத்தியதால், அவர்களின் கார்களில் செல்ல நேர்ந்தது. சுற்றுலா துறை அதிகாரிகளும் தொழிற்சங்கத்தினரின் சொல்படி நடக்குமாறும் கூறினர். மூணாறுக்கு வரும் முன்னர் கொச்சி, ஆலப்புழா ஆகிய பகுதிகளுக்கு சென்றபோது அனைவரும் கண்ணியமாக நடந்து கொண்டனர். அதற்கு எதிர்மாறாக மூணாறில் நடந்தது, என சமூக வலைதளங்களில் நேற்று பதிவிட்டார். அது வைரலான நிலையில், அச்சம்பவம் தொடர்பாக மூணாறு போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் ஏ.எஸ்.ஐ., சாஜிபவுலோஸ், கிரேடு எஸ்.ஐ., ஜார்ஜ்குரியனை இடுக்கி எஸ்.பி., சாபு மாத்யூ சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி