காஜிப்பூரில் எரிசக்தி ஆலை மாநகராட்சி டெண்டர்
புதுடில்லி:காஜிப்பூர் குப்பைக் கிடங்கு கழிவுகளிலிருந்து, எரிசக்தி தயாரிக்க மாநகராட்சி டெண்டர் அறிவித்துள்ளது.டில்லியில் உள்ள மூன்று குப்பைக் கிடங்கில் முக்கியமான கிடங்கான காஜிப்பூர் குப்பைக் கிடங்கை சீரமைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காஜிப்பூர் கிடங்கில் கழிவுகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலை நிறுவ, மாநகராட்சி சார்பில், 9ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.