உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்ஷன் பேனர்களை அகற்றிய நகராட்சி

தர்ஷன் பேனர்களை அகற்றிய நகராட்சி

ஹொஸ்கோட் : நடிகர் தர்ஷன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்கள் வைத்திருந்த பேனரை ஹொஸ்கோட் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் தர்ஷன், 48. இவருக்கு நேற்று பிறந்தநாள். கொலை வழக்கில் ஜாமினில் உள்ளார். சிறையில் இருந்து விட்டு வெளியே வந்த பின் நடக்கும் பிறந்தநாள் என்பதால், தர்ஷன் அடக்கி வாசித்தார். மனைவி, மகன், சில நண்பர்களுடன் மட்டும் இணைந்து வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், பேனர் வைத்தும் பிறந்தநாள் கொண்டாடினர்.இதுபோல பெங்களூரு ஹொஸ்கோட் பஸ் நிறுத்தம் அருகே, தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் பேனர் வைத்து இருந்தனர். ஆனால் அனுமதியின்றி வைத்ததாக கூறி, அந்த பேனரை ஹொஸ்கோட் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பின், தர்ஷன் பெயரில் அவரது தோழி பவித்ரா கோவிலில் அர்ச்சனை செய்தார். இருவரும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான போது கூட, பவித்ரா அழுத போது, தர்ஷன் ஆறுதல் கூறினார். ஆனால் தர்ஷன் பிறந்தநாளுக்கு பவித்ரா வாழ்த்து கூட கூறவில்லை. சமூக வலைதளங்களில் தாயுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை