உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னப்பட்டணா இடைத்தேர்தல் யோகேஸ்வருக்கு முனிசாமி ஆதரவு

சென்னப்பட்டணா இடைத்தேர்தல் யோகேஸ்வருக்கு முனிசாமி ஆதரவு

கோலார்: ''சென்னப்பட்டணா தொகுதியை பா.ஜ.,வின் யோகேஸ்வருக்கு ம.ஜ.த., விட்டுக் கொடுக்க வேண்டும்,'' என, கோலார் முன்னாள் எம்.பி., முனிசாமி வலியுறுத்தினார்.கோலாரில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி:கோலார் தொகுதி எம்.பி.,யாக இருந்த நான், கூட்டணி தர்மத்திற்காக அத்தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுக் கொடுத்தேன். ம.ஜ.த., வேட்பாளர் வெற்றியும் பெற்றார்.மாண்டியா தொகுதியில் குமாரசாமிக்காக பா.ஜ.,வின் யோகேஸ்வர் கடுமையாக உழைத்தார். எனவே, இடைத்தேர்தல் நடக்கும் சென்னப்பட்டணா தொகுதியை யோகேஸ்வருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அவர் போட்டி வேட்பாளராக மாறினால் பாதிப்பு ஏற்படும்.வால்மீகி ஜெயந்தி விழாவை கொண்டாட காங்கிரசாருக்கு தகுதியே கிடையாது. வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. எஸ்.சி., - எஸ்.டி.,களுக்கான நிதி 25 ஆயிரம் கோடி ரூபாயை, பிற துறைகளுக்கு மாற்றியதை பலரும் அறிவர்.கோலார் மாவட்டத்தில் கலெக்டராக இருக்கும் அக்ரம் பாஷா, தன் இஷ்டப்படி நடந்து கொள்கிறார். சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வ கர்மா யோஜ்னா திட்டத்திற்கு வந்த விண்ணப்பங்களில், ஒரே சமுதாயத்தை சேர்ந்த 950 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த பலனும் இல்லை. அவரை இடமாற்றம் செய்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ