உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாரி ஏற்றி சமூக ஆர்வலர் படுகொலை; அரசு அதிகாரிகள் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

லாரி ஏற்றி சமூக ஆர்வலர் படுகொலை; அரசு அதிகாரிகள் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் ஜெகபர் அலி. இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2hc2dc1x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், கலெக்டரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த தி.மு.க., கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க., அரசு. திரு. ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை தி.மு.க., அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

pmsamy
ஜன 20, 2025 12:26

அண்ணாமலை சொல்றத பார்த்தா நீதிமன்றம் எல்லாம் உபயோகமில்லாமல் இருக்குதா.


VENKATASUBRAMANIAN
ஜன 20, 2025 07:55

எங்கே போனார்கள் முஸ்லிம் கட்சிகள் அமைப்புக்கள். திமுகவுக்கு ஜால்ரா அடித்தால் இப்படித்தான். இப்போது குரல் கொடுப்பது பாஜக இதை மறக்கவேண்டாம்


பாமரன்
ஜன 20, 2025 07:50

.. கோர்ட்டுக்கு போகட்டும்...


Kasimani Baskaran
ஜன 20, 2025 07:29

அணைத்து வித அளவுகோல்களை வைத்து அளந்தாலும் எதிலும் தேறாத இந்த அரசு நீக்கப்பட வேண்டியதே. அடைப்பும் முன்னாள் உயர் கல்வியும் கடும் கிரிமினல்கள்..


N.Purushothaman
ஜன 20, 2025 06:58

மோடிஜி அவர்களே ...நியாயப்படியும் தர்மப்படியும் இந்த ஆட்சி இன்னமும் நீடிக்க வேண்டுமா ? 356 சட்டப்பிரிவை பயன்படுத்துவது அவ்வளவு கொடூர குற்றமும் அல்ல ....அரசியல் கணக்குகளை தள்ளி வைத்து தமிழகத்தை காப்பாற்ற ஏதாவது செய்யுங்க ...


நிக்கோல்தாம்சன்
ஜன 20, 2025 06:33

ஜெகபர் அலி? அய்யா இந்த ஆட்சியில் யாருக்கு தான் பாதுகாப்பு ? மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஓட்டுபோடுவது தமிழகத்தை இருண்டகற்காலத்துக்கு தள்ளவா ?


Bala
ஜன 20, 2025 06:33

சட்டம் தெரியாத ரகுபதி இதற்கு என்ன சொல்ல போறான்.


Mani . V
ஜன 20, 2025 05:42

எங்களுக்குத் தேவையில்லையென்றால் தா.கி, ஜாபர் ஜாதிக், ஜேப்பியார்,......... எல்லாம் போக வேண்டிய இடத்துக்குப் போக வேண்டியதுதான்.


J.V. Iyer
ஜன 20, 2025 04:14

அண்ணாமலைஜி இந்த கொடிய ராக்ஷஸர்களை ஒழிக்க சாணக்யனைப்போல செயல்படவேண்டும். மொஹம்மத் கஜினி 16 முறை புறமுதுகிட்டு ஓடியபோது அவனை கொல்லாமல் விட்டது ஹிந்துஸ்தானில் போர்ப்பழக்கம் காரணமாக. ஆனால் அதை அவன் கடைப்பிடித்தானா? 17 வது முறை ஏமாற்றி வெற்றிபெற்றான். காலத்திற்கு ஏற்றாற்போல நாமும் நமது போர் உத்தியை மாற்றிக்கொண்டால்தான் இந்த கொடிய பயங்கரவாத திராவிஷத்தை தமிழகத்தை விட்டு ஒழிக்கமுடியும். இல்லாவிட்டால் தினமும் இப்படித்தான். சாணக்யன்போல செயல்படுங்கள் தலைவரே. உங்களுக்குத் தெரியாதது இல்லை. இவர்களை எப்படி ஒழித்தாலும் பாவம் இல்லை.


Bala
ஜன 20, 2025 02:44

காட்டுமிராண்டிகள் விடியலாரின் திராவிட மாடலின் ஆட்சியை எதிர்த்து அயராது போராடும் திரு அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவளிப்போம்


முக்கிய வீடியோ