உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 ஆண்டாக தேடப்பட்ட கொலையாளி சிக்கினார்

2 ஆண்டாக தேடப்பட்ட கொலையாளி சிக்கினார்

புதுடில்லி:இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளியை, போலீசார் கைது செய்யப்பட்டார்.புதுடில்லி சிராஸ்பூரைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார் ஜா, 22. கடந்த 2023ம் ஆண்டு கேசவ் என்பவரை கொலை செய்தார். ஸ்வரூப் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். அதேபோல, சமய்பூர் பட்லியிலும் ஒரு கொலை வழக்கில் ஹேமந்த் குமார் ஜா, தேடப்பட்டு வந்தார்.போலீசார் தேடுவதை அறிந்த ஹேமந்த் குமார், மாறுவேடங்களில் ஊர் ஊராக திரிந்தார். அடிக்கடி இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.இதற்கிடையில், இரு கொலை வழக்குகளிலும், ஹேமந்த் குமார் ஜா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில், டில்லி மாநகரப் போலீசின் குற்றப்பிரிவு தனிப்படையினர், ஹைதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம், ஹேம்ந்த் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை