உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இசையமைப்பாளர் தேவா காலமானார்

இசையமைப்பாளர் தேவா காலமானார்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தேவா. மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989ம் ஆண்டு இசையமைப்பாளர் அறிமுகமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட 450 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேவா. தன்னுடைய குரல் மற்றும் இசையினால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். கடந்த சில தினங்களாக வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேவா, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ