உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முத்தஹனுமே கவுடா காங்கிரசில் சேர எதிர்ப்பு

முத்தஹனுமே கவுடா காங்கிரசில் சேர எதிர்ப்பு

துமகூரு: முன்னாள் எம்.பி., முத்தஹனுமே கவுடாவை மீண்டும் சேர்க்க, துமகூரு மாவட்ட காங்கிரசில் எதிர்ப்பு எழுந்துள்ளது.காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.பி., முத்தஹனுமேகவுடா, 2019ல் இவருக்கு 'சீட்' மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், காங்கிரசில் இருந்து விலகினார்.தன் விலகலுக்கு சிவகுமார் உட்பட பல தலைவர்களை குற்றம் சாட்டியிருந்தார். தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதனால், மீண்டும் காங்கிரசில் இணைய முத்த ஹனுமே கவுடா முயற்சித்து வருகிறார்.ஆனால், இவரின் இணைப்புக்கு மாவட்ட காங்கிரசில் எதிர்ப்பு எழுந்துள்ளது. துமகூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் முரளிதர் ஹாலப்பா சீட் எதிர்பார்த்துள்ளார்.முத்தஹனுமே கவுடா மீண்டும் கட்சியில் சேர விரும்பும் தகவல் வெளியான நிலையில், முரளிதர் ஹாலப்பா வீட்டில் ரகசிய கூட்டம் நடந்துள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் கவுடா தலைமை வகித்துள்ளார். கட்சி மேலிடத்தை வலியுறுத்த அப்போது அவர்கள் முடிவெடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ