மைசூரு தசரா விழா கோலாகல துவக்கம் எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு கவுரவம்
மைசூரு : கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் இந்த விழாவை, 'புக்கர்' பரிசு பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், சாமுண்டீஸ்வரி தேவியை வணங்கி துவக்கி வைத்தார். கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில், தசராவும் ஒன்று. வழக்கமாக, 10 நாட்கள் நடக்கும் தசரா விழா, இந்தாண்டு 11 நாட்கள் நடக்கிறது. பெருமை பிரசி த்தி பெற்ற இவ்விழா, மைசூரு சாமுண்டி மலையில் நேற்று துவங்கியது. புக்கர் பரிசு பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், சாமுண்டீஸ்வரி கோவிலில் தேவியை தரிசனம் செய்து , தீபாராதனையை தொட்டு வண ங்கினார். அப்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டார். அ தன்பின், விழா மேடைக்கு வந்த அவர், மேடையில் வெள்ளி தேரில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர்கள் து ாவி வணங்கினார். குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: இந்த பூமியின் தெய்வமான ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி பூஜையுடன், தசரா விழா துவங்கி உள்ளது. கலாசாரம் என்பது வெவ்வேறு குரல்களின் சங்கமம். மன்னர் ஜெயசாமராஜேந்திர உடையார், முஸ்லிம்களை நம்பி, தன் மெய்க்காப்பாளர் படையின் உறுப்பினர்களாக நியமித்தார். இது எங்களுக்கு மிகுந்த பெருமை ஏற்படுத்தும் விஷயம். இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் சித்தராமையா பேசுகையில், “தசரா மற்றும் நம் கலாசார மகத்துவம் பற்றி தெரியாதவர்கள், பானு முஷ்டாக்கை எதிர்த்தனர். அரசியல் செய்ய போகிறோம் என்றால், அதை தேர்தலில் செய்வோம். தசரா விழாவில் கீழ்த்தரமான அரசியல் செய்வது அற்பமானது. வரவேற்பு ''தசராவை பானு முஷ்டாக் துவக்கி வைப்பதை, நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் வரவேற்றுள்ளனர். வெறுப்பை கொண்டாடுபவர்கள், மனித குலத்தின் எதிரிகள்,” என்றார். தசரா துவக்க விழாவை முன்னிட்டு, மைசூரு அரண்மனையில் மன்னர் குடும்பத்தினர் சார்பில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டன. வாணிவிலாஸ் அரண்மனையில், மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு, அவரது மனைவி திரிஷிகா குமாரி பாத பூஜை செய்து, தீபாராதனை காண்பித்தார். அதுபோன்று அவரது மகனும் பாத பூஜை செய்தார். தொடர்ந்து, ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் யதுவீர் அமர்ந்து, தர்பார் நடத்தினார். கர்நாடக மாநிலம், மைசூரில் பிரசித்தி பெற்ற தசரா திரு விழாவை, புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பா னு முஷ்டாக், சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர்கள் துாவி துவக்கி வைத்தார். அருகில், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர்.(அடுத்த படம்) அரண்மனையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் நின்ற யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், சல்யூட் அடித்து தனியார் தர்பார் நடத்தினார். (கடைசி படங்கள்) மின்னொளியில் ஜொலித்த சதுக்கம், நகர சாலை.