மேலும் செய்திகள்
தங்க சிம்மாசனம் ஜோடிப்பு அரண்மனைக்குள் செல்ல தடை
26-Sep-2024
மைசூரு: மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.நடப்பாண்டு தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்திருந்தனர்.தசரா நிறைவு பெற்ற பின், மைசூரு அரண்மனை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:இன்று முதல் அரண்மனையை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணியர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும்; 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு 50 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும்; கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும்; வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
26-Sep-2024