உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளா கோலாகலம்; படங்களை வெளியிட்டது நாசா!

கும்பமேளா கோலாகலம்; படங்களை வெளியிட்டது நாசா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளா முன்னிட்டு இரவு நேரத்தில் ஒளிரும் நகரத்தின் படங்களை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வாளர் வெளியிட்டார். இதற்கிடையே இன்று நடந்த கும்பமேளாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்பமேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளா துவங்கியதில் இருந்து, நேற்று வரை, 11.47 கோடி பேர், புனித நீராடி உள்ளனர். இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையே, இன்று (ஜன., 27) திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு செய்தார். அப்போது அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ் உள்ளிட்டோரும் புனித நீராடினர். 15வது நாளை எட்டியுள்ள மஹா கும்பமேளா நிகழ்ச்சி களைகட்டி உள்ளது.

படம் வெளியிட்டது நாசா!

இதற்கிடையே விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா விண்வெளி வீரரான டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.நாசா வீரர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், '2025ம் ஆண்டு மஹா கும்பமேளா நிகழ்ச்சியின் நடந்து வருகிறது. இது இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுத்த புகைப்படம். உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழாவை முன்னிட்டு, இரவு வேளையில் நகரம் ஒளிர்கிறது' என குறிப்பிட்டு இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NALAM VIRUMBI
ஜன 27, 2025 16:41

சமஸ்கிருதத்தில் சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். இது பல சொங்கிகளுக்கு தெரியாது.


vivek
ஜன 27, 2025 15:07

ஆமாம் மங்கியில் இருந்து சங்கியாக மாறிய யாச்சு....நீ இன்னும் மாறலயா?


Barakat Ali
ஜன 27, 2025 14:36

நாசாவும் சங்கியாயிருச்சா ????


S Ramkumar
ஜன 27, 2025 15:17

இதுக்கும் உங்களுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா. உங்கள் பெருநாள் அன்று நாசா இதே போல ஒளிரும் மெக்கா என்று படம் பகிர்ந்தால் உங்கள் கருத்த்த்து என்னவாக இருக்கும்.


தேவராஜ்,தருமபுரி
ஜன 27, 2025 16:43

நீ எப்பவும் மங்கிதான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை