வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இறந்தது யார்...ஓ அந்த மதத்தவரா... அப்ப முன்விரோதம் தானே காரணமாக இருக்கனும்... சட்டம் ஒழுங்கெல்லாம் ஒழுங்கா தானே இருக்கு ... என்ன கரீக்டுதானே...
சுட்டவனுன் மர்ம மர்ம நபர் அப்போ சரியா தானே இருக்கு
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை நேற்று(அக்.,12) இரவு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர், மும்பை நிர்மல் நகர் பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்ம கும்பல், காரில் இருந்த சித்திக் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர். இதில் வயிறு மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்தன. மயங்கி சரிந்த சித்திக்கை அப்பகுதியினர் மீட்டு, அங்குள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் பாபா சித்திக் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இறந்தது யார்...ஓ அந்த மதத்தவரா... அப்ப முன்விரோதம் தானே காரணமாக இருக்கனும்... சட்டம் ஒழுங்கெல்லாம் ஒழுங்கா தானே இருக்கு ... என்ன கரீக்டுதானே...
சுட்டவனுன் மர்ம மர்ம நபர் அப்போ சரியா தானே இருக்கு