உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி: தண்ணீர் பற்றாக்குறை!

தேசியம் பேட்டி: தண்ணீர் பற்றாக்குறை!

தண்ணீர் பற்றாக்குறை!

மஹாராஷ்டிராவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 300 கோடி மரங்களை நட வேண்டும் என்பது எங்கள் அரசின் திட்டம். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு அதன் அளவைக் குறைத்துள்ளோம். எனினும், விவசாய நிலங்களில் மரங்களை நடுவது, மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் உதவும்.- தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,

எதிரானது அல்ல!

பா.ஜ.,வினர், தங்கள் கட்சி சின்னமான தாமரையை மலரச் செய்ய முழக்கமிடுவது, அச்சின்னம் வாடிவிட்டதை காட்டுகிறது. அதை மீண்டும் மலர வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத உணர்வுகளை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் பா.ஜ.,வினர், எங்கள் கட்சியை, ஹிந்து மதத்திற்கு எதிராக சித்தரிக்கிறது. நாங்கள் ஹிந்து மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல.- அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சி

வரவேற்க வேண்டும்!

பா.ஜ.,வில் இருந்து விலகிய பத்மஜா வேணுகோபால், எங்கள் கட்சியில், மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபோல் தவறுகளை உணர்ந்து மீண்டும் காங்கிரசுக்கு வர விரும்புவோர் அனைவரையும் வரவேற்க வேண்டும்; பா.ஜ.,வில் இருந்து இன்னும் பலர் எங்கள் கட்சிக்கு திரும்ப காத்திருக்கிறார்கள். இது, அனைவருக்கும் பொருந்தும்.- சாண்டி உம்மன்கேரள எம்.எல்.ஏ., காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி