உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு: தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு: தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்

புதுடில்லி; தமிழகத்துக்கு நடப்பாண்டில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆக.22ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளம் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. மீதமுள்ள காலி இடங்கள், முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றும் கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்பும் 2ம் சுற்று கலந்தாய்வு செப்.4ம் தேதி தொடங்கியது.செப்.19ம் தேதியுடன் இந்த கலந்தாய்வு முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கூடுதல் இடங்கள் சேர்க்க இருப்பதோடு, என்ஆர்ஐ ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டிய காரணத்தால் 2ம் கட்ட கலந்தாய்வு செப்.25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் அதன் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், மொத்தம் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் என 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன் சேர்த்து, இதன் மூலம் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6850 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்ளது. உரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 1056 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 இடங்கள் அளிக்க விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கல்லூரிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் nmc.org.inஎன்ற இணையதளத்தில் சென்று பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

என்றும் இந்தியன்
செப் 17, 2025 17:42

350 x Rs. 70 lakhs per seat = Rs. 245.00 Crores It is too less as per DMK since election is coming we want at least another 10 times that is 3,500 seats increase so that at least we can get Rs. 2,450 crores. this can be spent for election for catching vote.


அப்பாவி
செப் 17, 2025 16:19

2047 க்குள்ளே ஒரு ஆளுக்கு 10 டாக்டர்கள் இருப்பாங்க ஹை.


V Venkatachalam
செப் 17, 2025 17:22

2047 க்குள் நோயாளிகளே இருக்கமாட்டாங்க ஹை. இப்பவே தானா இன்சுலின் செலுத்தி பேஷன்டை சுகர் இல்லாம பாத்துக்குற மிஷின் வந்துட்டு ஹை. மேலும் எல்லாருக்கும் மோடி மருத்துவ காப்பீடு மற்றும் குறைந்த விலையில் மருந்து இருக்கு ஹை. அதனால அந்த 10 10 டாக்டரையும் ஆப்ரிக்காவுக்கு அனுப்பிடலாம் ஹை.வருத்தப்பட ஒண்ணுமில்ல ஹை.


raja
செப் 17, 2025 12:48

இங்கே தமிழர்கள் படித்து மருத்துவர்கள் ஆகிவிடுவார்கள் என்று திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்துக்கு தேவையான கட்டமைப்பு, ஆய்வக உபகரணங்கள் ஆசிரியர்கள் உட்பட பல வசதிகளை செய்யாததால் தமிழக அரசு கல்லூரிகள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது என்பதே உண்மை .. இந்த செய்தியில் குறிப்பிட்ட இடங்கள் தனியார் கல்லூரிகள் மேற்சொன்ன வசதிகளை செய்து காண்பித்து வாங்கியவர்.. ருவா இறநூறு கொத்தடிமைகள் தேர்தல் என்றும் தான் திருடி பிறரை நம்பாது என்ற பழமொழிக்கு ஏற்ப லஞ்சம் என்று புலம்புவதை கேட்டால் அய்யோ என்ற பரிதாபம் தான் மேலோங்குகிறது.....


Venugopal S
செப் 17, 2025 11:21

கூடுதல் இடங்கள் அனுமதி அளித்த தமிழக மருத்துவக் கல்லூரிகள் எல்லாமே தனியார் கல்லூரிகள்.மத்திய பாஜக அரசு வாங்க வேண்டியதை வாங்கி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டார்கள் போல் உள்ளதே!


V Venkatachalam
செப் 17, 2025 18:10

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.


ஆரூர் ரங்
செப் 17, 2025 11:04

கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. ஆனால் கட்சித்தலைவர்கள், பினாமிகள் நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகள் கூடுதல் சீட்களை பெற்றுள்ளன. திராவிஷமாடல் சீட்டிங்.


Abdul Rahim
செப் 17, 2025 10:52

தேர்தல் தேர்தல் தேர்தல் ...


Anbuselvan
செப் 17, 2025 10:36

NEET தேர்வு ரத்தாக வாய்ப்பே இல்லை என்கிற நிலை. உச்ச நீதிமன்றம் இதில் உறுதியாக உள்ளது. நீட் தேர்வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்தவர்கள் எதிர்க்கிறார்கள். இதை யாரிடம் போய் சொல்வது? அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழகத்தில் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கி இருப்பது வரவேற்க தக்கது. இதன் மூலம் தமிழகம்த்தின் எம்பிபிஎஸ் சீட்டுகள் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடத்தில் இருக்கும். இதெல்லாம் சொன்னால் புரிந்து கொண்டாலும் புரியாத மாதிரி இருப்பவர்களை என்னன்னு சொல்றது


சாமானியன்
செப் 17, 2025 08:11

சுப்பராயலு சொல்வது சரிதான். இதை என்டீஏ கூட்டணி தனது வாக்குறுதியில் சேர்த்து நிறைவேற்ற வேண்டும். பழனிசாமி கவனத்திற்கு.


V Venkatachalam
செப் 17, 2025 15:49

அவர் சுப்புராமு. சுப்பராயன் இல்லை. இதை ஏன் திராவிடியா மூடல் அரசு பண்ணலை? பண்ணவில்லை என்றால் அவனுங்க தானே பண்ணணும்? எல்லாவற்றிலும் முதன்மை மாநிலம் ன்னு வெட்கமில்லாமல் பீத்திக்கிறானுங்களே? அது என்னவாம்?


GMM
செப் 17, 2025 07:38

350 MBBS _ இடங்கள் கூடுதலாக தனியார் கல்லூரிக்கு ஒதுக்கீடு. அதே தனியார் கல்லூரிகள் தேவையான அளவு நர்சு போன்ற கல்லூரிகளை நடத்த வேண்டும். அதிக லாபம் உள்ளதை அரசியல் செல்வாக்கு உடையவர் பெற்று விடுவர். வருவாய் ஈட்டி தராத படிப்பை அரசு வரி பணத்தில் நடத்த வேண்டும். இது ஒரு சலுகை ஊழல். ஊழல் உதயம் தமிழகம். மருத்துவ ஆணையம் ஒத்துழைப்பு. மௌனம். உதவிக்கு போதிய மனித சக்தி இல்லை என்றால், டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோர் இட ஒதுக்கீடு மூலம்4படித்து அரசியல் செய்வது போல் செய்ய தான் வேண்டும்.


Subburamu K
செப் 17, 2025 07:30

Dravidian government is not improving facilities in Medical colleges. Not sufficient faculties, no enough supporting staff, insufficient buildings, lack of modern Medical equipments and poor allotment of recurring contingencies


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை