உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை (மே 07) போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். அப்போது போர் ஒத்திகை குறித்து முக்கிய ஆலோசனை நடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடியை அஜித் தோவல் இரண்டாவது முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R. SUKUMAR CHEZHIAN
மே 06, 2025 15:28

நல்ல நாளும் நேரமாக பார்த்து முகூர்த்தம் குறிங்க இந்த தக்குறி ஜிகாதி கும்பல்களுக்கு.


Barakat Ali
மே 06, 2025 13:48

இப்ப நாம அடிக்கப்போற அடியில இன்னும் அம்பது வருசத்துக்கு அவன் தலைதூக்கக் கூடாது ..... பாக் விசயத்துல நமக்கு நண்பர்களே இல்லை ன்னு புரிஞ்சுக்குங்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை