தேசியம் – பேட்டி: நாங்கள் வேலைக்காரர்களா?
நாங்கள் வேலைக்காரர்களா?
உ.பி., சட்டபை தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு ஒருபுறம் நடக்கிறது. மறுபுறமோ, தங்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தன்னிச்சையாக அறிவிக்கிறது. கூட்டணி தர்மம் எங்கே இருக்கிறது? காங்கிரசார் என்ன உங்கள் கூட்டணி கட்சியினரா அல்லது வேலைக்காரர்களா?- இம்ரான் மசூத்லோக்சபா எம்.பி., – காங்.,
தகர்க்க முடியாது!
பயங்கரவாத செயல் பல உயிர்களை பறிக்கலாம். ஆனால், தைரியம், கருணை மற்றும் மீண்டெழும் திறன் ஆகியவற்றால் ஒன்றிணைந்த ஒரு தேசத்தின் மன உறுதியை பயங்கரவாதத்தால் ஒருபோதும் தகர்க்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அச்சமின்றி நிற்கும் நம் பாதுகாப்பு படை வீரர்களின் துணிச்சலை போற்றுகிறேன்.- திரவுபதி முர்முஜனாதிபதி
நேர்மையாக நடக்காது!
பிரதமர் மோடிக்கும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கும் இடையே ஒரு கூட்டணி உள்ளது. இருவரும் பதவி விலகும் வரை இந்த நாட்டில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்காது. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகளை தொடர்ந்து சிதைத்து வருகிறது.- மல்லிகார்ஜுன கார்கேதேசிய தலைவர், காங்கிரஸ்