உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

மக்களை ஏமாற்றும் காங்கிரஸ்!தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி காங்., ஆட்சிக்கு வருகிறது. கர்நாடகா, தெலுங்கானாவில் அக்கட்சி இப்படி தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பா.ஜ.,கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையை பெற்று ஆட்சி அமைக்கிறது. இது ஹரியானாவிலும் தொடரும்.நரேந்திர மோடிபிரதமர் 1 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள்!பத்து ஆண்டுகளுக்கு முன், லவ் ஜிஹாத் என்பது ஒரு சாதாரண பேச்சு என்றும், அது சதி அல்ல என்றும் நினைத்தோம். ஆனால், ஹிந்து பெண்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டது தொடர்பாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான புகார்களை பெற்றுள்ளோம். இது சதி என்பது தற்போது நிரூபணமாகிறது.தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிர துணை முதல்வர், பா.ஜ.,பா.ஜ.,வுக்கும் அதே கதி தான்!பீஹாரில், 15 ஆண்டுகளாக லாலு பிரசாத் யாதவ் காட்டாட்சி நடத்தினார். இதற்கு காங்., உதவியது. தற்போது அக்கட்சி இருக்கும் இடமே தெரியவில்லை. உடல் மற்றும் மன ரீதியாக, முதல்வர் நிதீஷ் குமார் தயாராக இல்லை. அவருக்கு பா.ஜ., உதவினால், காங்கிரசுக்கு நேர்ந்தது அக்கட்சிக்கும் நேரும்.பிரசாந்த் கிஷோர்தேர்தல் உத்தி வகுப்பாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ