உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

மோடி கைதேர்ந்தவர்!மஹாத்மா காந்தி உண்மையையும், அகிம்சையையும் நமக்கு கற்றுக் கொடுத்தார். ஆனால், இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், எந்தளவுக்கு பொய் பேச முடியுமோ அந்தளவுக்கு பேசுகின்றனர். பொய் பேசுவதில் பிரதமர் மோடி கைதேர்ந்தவர்.மல்லிகார்ஜுன கார்கேகாங்., தேசிய தலைவர்வாக்குறுதி என்னாச்சு?ஒடிசா சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இதுவரை அக்கட்சி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இலவசமாக 300 யூனிட் மின்சாரம் அளிக்கப்படும் என, பா.ஜ., அளித்த வாக்குறுதி என்ன ஆனது?நவீன் பட்நாயக்எதிர்க்கட்சி தலைவர், ஒடிசாவிவசாயிகள் புத்திசாலி!ஹரியானாவிற்கு ராகுல் வரும்போதெல்லாம், மாநிலத்தில் உள்ள விவசாயிகள் உஷாராகி விடுகின்றனர். தங்களின் நிலத்தை காங்., நிர்வாகிகள் அபகரித்து விடுவர் என்பதை அவர்கள் புரிந்துள்ளனர். இது, புத்திசாலித்தனமான அணுகுமுறை.ஓம் பிரகாஷ் தன்கர்தேசிய பொதுச்செயலர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை