தேசியம் பேட்டி
அதீத நம்பிக்கை கூடாது!ஹரியானா தேர்தல் முடிவுகள் எப்படி வந்துள்ளது என்று பார்த்தீர்களா? இதிலிருக்கும் மிகப்பெரிய பாடம் என்னவென்றால், தேர்தல்களில் அதீத நம்பிக்கையுடன் செயல்படக் கூடாது. எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு தேர்தலும் கடினமானது.அரவிந்த் கெஜ்ரிவால்ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மிமுதல்வர் வேட்பாளர்!மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்., முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். முதல்வர் வேட்பாளரை அறிவித்தால், அவர்களுக்கு இப்போதே நான் ஆதரவளிப்பேன். ஹரியானா, காஷ்மீர் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுத்துள்ளனர்.உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா உத்தவ் அணிதோல்வியை ஏற்கிறேன்!மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். நான் போட்டியிட்ட பிஜ்பெஹாரா தொகுதியில் எனக்கு ஓட்டளித்த மக்களின் அன்பும், பாசமும் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த தேர்தல் முழுதும் கடுமையாக உழைத்த எங்களின் மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்களுக்கு நன்றி.இல்திஜா மெகபூபா முப்திமுன்னாள் முதல்வர் மெகபூபா மகள், மக்கள் ஜனநாயக கட்சி