தேசியம் பேட்டி
வயதானால் என்ன?என்னை 84 வயது முதியவர் என கிண்டலடிக்கின்றனர். கவலையில்லை. 84 வயதோ, 90 வயதோ, மாநிலத்தை சரியான பாதைக்கு திருப்பும் வரை இந்த கிழவன் ஓயமாட்டான். ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. சரத் பவார்தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணிபிரதமர் ஆலோசிப்பாரா?இந்தியா - கனடா இடையேயான உறவு சமீபகாலமாக மோசமடைந்துஉள்ளது. மிக முக்கியமான இந்த விவகாரம் குறித்து பார்லிமென்டின் இரு சபைகளிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.ஜெய்ராம் ரமேஷ்பொதுச் செயலர், காங்கிரஸ்பேச்சு மட்டும்தான்!பார்லி., கூட்டுக்குழு முன் விவாதத்தில் உள்ள, மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமான வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசியலமைப்பு குறித்து வாய்கிழிய பேசும் இடதுசாரிகள் அதை மதிக்காமல் செயல்பட்டுள்ளனர்.ெஷஷாத் பூனாவாலாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,