உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

அரசியலமைப்பு முறைகேடு!ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது அரசியலமைப்புச் சட்ட மீறல். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்காதது தவறு. இது, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான நேரம். மீண்டும் மாநிலமாக மாற்றுவது ஜம்மு - காஷ்மீர் மக்களின் அரசியலமைப்பு உரிமை. கபில் சிபல்ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சைஎப்படி இருந்தோம் நாம்!பெங்களூரு ஒரு காலத்தில் சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்பட்டது. தற்போது மூன்று நாள் மழைக்கே நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முதல்வரோ, அமைச்சர்களோ பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடவில்லை. ஒவ்வொரு மழை சீசனிலும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறோம்.குமாரசாமிமத்திய அமைச்சர், ம.ஜ.த.,குழப்ப கூட்டணி!சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை குறித்து நேற்று பேசினார். அன்றே, அக்கட்சியின் மஹாராஷ்டிரா தலைவர் அபு அஸ்மி, 'மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் அதிக சீட்டுகளை கேட்போம். தரவில்லை என்றால் செய்ய வேண்டியதை செய்வோம்' என பேசியுள்ளார். இதுதான் ஒற்றுமையா?ஷெஷாத் பூனாவாலாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை