உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

கட்டுப்பாட்டில் முதல்வர்!பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரால் வழக்கம் போல் செயல்பட முடியவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ், அவர் உள்ளார். அரசில், அவர் சொந்தமாக முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. தேஜஸ்வி யாதவ்தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்ரேஷனில் ஊழல்!மேற்கு வங்கத்தில் ரேஷனில் நடந்த ஊழலுக்காக முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ஜோதி பிரியா மாலிக் கைது செய்யப்பட்ட போதும், பொது வினியோக திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்கிறது. சமீபத்தில் அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்யும் வீடியோ வெளியானதே அதற்கு சாட்சி.சுவேந்து அதிகாரிமே.வங்க எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,ஆரிய - திராவிட பொய்!ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தையும், நம் அறியாமையையும் பயன்படுத்தி பல பொய்களை விதைத்தனர். அதில் ஒன்று, 'இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். ஆரியர்கள் வந்து திராவிடர்களை ஒடுக்கினர்' என்பது. இந்த கோட்பாடு உலகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது.மோகன் பகவத்தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ