உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

கூட்டணிக்கு வரவேற்போம்!முன்னாள் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பாரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்தார். அவரை பா.ஜ., தற்போது ஓரங்கட்டிவிட்டது. மகர சங்கராந்தி விருந்துக்காக அவர் என்னை அழைத்துள்ளார். எங்களின் மகாகத்பந்தன் கூட்டணிக்கு வந்தால், அவரை வரவேற்போம்.லாலு பிரசாத் யாதவ்தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்கட்சிக்கு நிதி திரட்டுங்கள்!காங்கிரஸ், பா.ஜ., மற்றும் பிற கட்சிகளை போல், நாம் பெரிய தொழிலதிபர்களிடம் இருந்து நிதி பெறுவதில்லை. அதனால் தான் விளிம்புநிலை மக்களுக்காக சமரசமின்றி போராட முடிகிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் நிதி நிலைமையை பலப்படுத்த வேண்டும். மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்மிகப்பெரிய இடைத்தேர்தல்!உ.பி., மாநிலம் அயோத்தி மாவட்டம் மில்கிபூர் சட்டசபைக்கு நடப்பது நாட்டின் மிகப்பெரிய இடைத்தேர்தல். மில்கிபூரில் கூட பா.ஜ., வலுவிழந்துவிட்டது. விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும், பா.ஜ.,வை தோற்கடிக்க தயாராகி விட்டனர். அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை