| ADDED : பிப் 22, 2024 01:07 AM
என்ன மாதிரியான ஆட்சி இது?பிரதமர் மோடியின் ராம ராஜ்ஜியத்தில், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் உள்ளிட்டவை கிடைப்பதை அவர் விரும்பவில்லை. என்ன மாதிரியான ஆட்சி இது?ராகுல்எம்.பி., - காங்.,புறக்கணிக்கும் கேரள அரசு!கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனிதர்கள் - -விலங்குகள் இடையேயான மோதலை, அம்மாநில அரசும், உள்ளூர் நிர்வாகமும் புறக்கணித்து வருகின்றன. இந்த நிலைமையை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன்.பூபேந்தர் யாதவ்மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பா.ஜ.,விரைவில் சரி செய்யப்படும்!ஒருசில மாநிலங்களில், லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, 'இண்டியா' கூட்டணி கட்சிகளிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மை தான். இதில், கட்சிகளின் மேலிடத் தலைவர்கள் கூடி பேசி விரைவில் சரி செய்வர். சரத் பவார்தலைவர், சரத் சந்திர பவார் - தேசியவாத பிரிவு