தகுந்த பதிலடி அளிப்பர்!
பிரதமர் மோடியின் மறைந்த தாயாரை தொடர்ந்து அவமதிப்பது காங்.,கின் மோசமான மனநிலையை பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சியினருக்கு, இத்தேர்தலில் பீஹார் மக்கள் தகுந்த பதிலடி அளிப்பர். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு ஆட்சியில், பீஹார் இருண்டு காணப்பட்டது; ஆனால், தற்போது வளர்ச்சியை நோக்கி செல்கிறது. நட்டா தேசிய தலைவர், பா.ஜ.,மாநில அந்தஸ்து வழங்குக!
ஜம் மு - காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ம த்திய அரசு மதிப்பளித்து, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் என நம்புகிறோம். இதன் வாயிலாக இங்குள்ள களச்சூழலை மேம்படுத்த முடியும். பஹல்காம் தாக்குதலால், பிரதான வருவாய் அளிக்கும் சுற்றுலாத்துறை, ஆறு மாதங்களாக முடங்கியதால் இங்குள்ள மக்கள் அவதியடைந்துள்ளனர். பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சிஅவமதிக்கும் செயல்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறுவது நம் தேச உணர்வையும், எல்லையை காக்கு ம் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் அவமதிக்கும் செயல். தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாயாது என பிரதமர் மோடி கூறிய நி லையில், தற்போது, கிரிக்கெட்டும் ரத்தமும் ஒன்றாக இணையுமா? உத்தவ் தாக்கரே தலைவர், உத்தவ் சிவசேனா பிரிவு