உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு தலையிட வேண்டும்!

மத்திய அரசு தலையிட வேண்டும்!

சபரிமலை கோவிலில், காணாமல் போன தங்கம் குறித்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இந்த விவகாரத்தின் மூலம் இக்கோவிலை, கேரள அரசால் நிர்வகிக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது. எனவே, சபரிமலை கோவிலை மத்திய அரசு நிர்வகிக்க வேண்டும். ராஜிவ் சந்திரசேகர் கேரள தலைவர், பா.ஜ.,

முரண்பாடான செயல்!

தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் எ னக் கூறும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர், தங்கள் அலுவலகங்களில் வந்தே மாதரம் மற்றும் நம் தேசிய கீதத்தை ஒரு போதும் பாடியது இல்லை என்பது முரண்பாடான செயல். மாறாக, அவர்களின் அமைப்புகளை புகழும் பாடல்களை பாடி வருகின்றனர். மல்லிகார்ஜுன கார்கே தலைவர், காங்கிரஸ்

தாக்கத்தை ஏற்படுத்தும்!

புலம்பெயர் தொழிலாளர்களாக பணியாற்றும் பீஹார் மக்கள், சத் பூஜையில் பங்கேற்க வந்த நிலையில், மீண்டும் பணியிடத்திற்கு செல்லாமல், சட்டசபை தேர்தலில் ஓட்டளித்ததால், ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தேர்தல் முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பிரசாந்த் கிஷோர் தலைவர், ஜன் சுராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை