உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., யாருக்கும் எதிரானது அல்ல

பா.ஜ., யாருக்கும் எதிரானது அல்ல

யாருக்கும் எதிரானதல்ல! பா.ஜ., யாருக்கும் எதிரானது அல்ல; அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயல்பட விரும்புகிறது. எல்லா மதத்தினரையும் தேசிய லட்சியங்களுடன் ஒன்றிணைப்பதன் மூலம் உலகிற்கே வழிகாட்டும் நாடாக, நம் நாட்டை மாற்ற வேண்டும். இது ஹிந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல; அனைவருக்குமானது. நிதின் கட்கரி மத்திய அமைச்சர், பா.ஜ.,வாரிசு அரசியல் தேவையில்லை! உத்தர பிரதேசத்திற்கு ரவுடி ராஜ்ஜியமோ அல்லது வாரிசு அரசியலோ தேவையில்லை. இங்குள்ள மக்கள், வளர்ச்சி, நல்லாட்சியை விரும்புகின்றனர். மீண்டும் தாமரை மலர்ந்தால், அம்மலரைப் போல் மாநிலமும் செழித்தோங்கும். சமாஜ்வாதி கட்சியின் 'சைக்கிள்' ஓடினால், அது அனைவரையும் நசுக்கிவிடும். கேசவ பிரசாத் மவுரியா உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,மறுபரிசீலிக்க வேண்டும்! ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வராத மத்திய அரசு, தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கை வெளிப்படைத்தன்மைக்கு உகந்ததாக இருக்கும். மத விவகாரங்களில் தன்னாட்சியாகவும் செயல்பட அனுமதிக்கலாம். ஜான் பிரிட்டாஸ் ராஜ்யசபா எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூலை 06, 2026 09:49

மதிப்பிற்குரிய நாக்பூர் மக்கள் பிரதிநிதி மா ண்புமிகு நிதின் கட்காரி ஒரு மிக பெரிய மனிதர் . இந்தியாவின் ராஷ்டிரபதவி அடுத்து இவரை தேடி வரவேண்டும்


சமீபத்திய செய்தி