| ADDED : செப் 07, 2026 09:03 PM
வளர்ச்சி தடைப்படாது! நம் நாட்டின் வளர்ச்சியை, எதிர்கட்சியினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தனிப்பட்ட நலன்களில் கவனம் செலுத்துகின்றனர். வரும், 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவை, நிறைவேற்ற அனைவரும் தயாராக உள்ளனர். எதிர்க்கட்சியினரின் கோபத்தால், நம் நாட்டின் வளர்ச்சி தடைப்படாது. நிதின் நபின் தேசிய தலைவர், பா.ஜ.,மசூதி இடிப்பு ஏன்? உத்தர பிரதேசத்தில் நீடிக்கும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, சஹாரன்பூரில் மசூதி இடிக்கப்பட்டது. பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் நடந்துள்ளது. வெறும், 63 கி.மீ., சாலை போட, இந்தத் தொகையை செலவு செய்துள்ளனர். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சிதிணிப்பது நியாயமா? உத்தரகண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டம், வெட்டி ஒட்டப்பட்ட ஒரு முயற்சி. பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் குறிப்பிட்ட மத சட்டங்களை திணிப்பதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை பா.ஜ., அரசு மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. ஒரு சமூகத்தின் சட்டங்களை, மற்றொரு சமூகத்தின் மீது திணிப்பது நியாயமா? அசாதுதீன் ஓவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி