தேசியம் பேட்டி:மனரீதியாக திவால்!
மனரீதியாக 'திவால்'! காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மனரீதியாக திவால் நிலையில் உள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அவருக்கு அதிகாரம் கிடைக்கவில்லை எனில், நம் நாட்டை விட்டு ஓடிவிடுவார். தனக்கு ஆட்சி, அதிகாரம் கிடைக்காது என்பது அவருக்கு தெரியும் என்பதால், நாட்டை எரித்துச் சாம்பலாக்க விரும்புகிறார். கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,பா.ஜ.,வின் கைப்பாவை! பா.ஜ.,வின் கைப்பாவையாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார். அவருடன் பணியாற்றும் சக அதிகாரிகளே கூட, அவரை நம்புவதில்லை. அரசியலமைப்பின் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்பங்கேற்க மாட்டோம்! நாங்கள், 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. எனவே, இன்று நடக்கும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது. தலைமைத் தேர்தல் கமிஷனர் மீதான கண்டன தீர்மானத்தில், நாங்கள் ஏற்கனவே கையெழுத்திட்டு உள்ளோம். பார்லி.,யில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அப்போது நாங்கள் கைகோர்ப்போம். சஞ்சய் சிங் ராஜ்யசபா எம்.பி., ஆம் ஆத்மி கட்சி