உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி:ஓட்டுச்சீட்டு முறை!

தேசியம் பேட்டி:ஓட்டுச்சீட்டு முறை!

ஓட்டுச்சீட்டு முறை!

எங்கள் கட்சியின் மூன்று கோரிக்கைகள் மீது எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. முதலில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும்; இரண்டாவது, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ரத்து செய்ய வேண்டும்; மூன்றாவது, ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.- மல்லிகார்ஜூன கார்கேதேசிய தலைவர், காங்கிரஸ்

பா.ஜ.,விடம் சரண்!

கேரளாவில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பா.ஜ.,விடம் சரணடைந்து விட்டது. மாநில அரசு, தன் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்காமல், பா.ஜ.,வுடன் ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இது, மாநில அரசுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே உள்ள ரகசிய உடன்பாட்டை வெளிப்படுத்துகிறது.- எம்.வி.கோவிந்தன்மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி

பாக்., செல்ல விருப்பம்!

நம் நாட்டில் நடத்தும் போராட்டங்களில் காங்., தலைவர் மணிசங்கர் அய்யருக்கு திருப்தி இல்லை. இப்போது, பாகிஸ்தான் சென்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை துாண்டும் நோக்கில் மீண்டும் அங்கு செல்ல விரும்புகிறார். அதற்காகவே, அந்நாட்டுடன் விரைவில் அமைதி ஏற்பட வேண்டும் எனக் கூறுகிறார்.- சம்பித் பத்ராசெய்தி தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !