உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்று விளம்பரம்!

வெற்று விளம்பரம்!

நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே, நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்த குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார். 2024ல், கே.ராதாகிருஷ்ணன் குழு அளித்த பரிந்துரைகளையே இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. பெயரளவுக்கு குழுவை அமைத்து, பிரதமர் மோடி வெற்று விளம்பரம் செய்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்அனுமதி அளித்தது யார்? பீஹாரில், போராட்டத்தின் போது மாணவர்களை நோக்கி ஏ.கே., 47 ரக துப்பாக்கியால் போலீஸ்காரர் ஒருவர் சுட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். ஒரு போலீஸ்காரரை மட்டும் சஸ்பெண்ட் செய்வது போதாது. துப்பாக்கியால் சுட யார் அனுமதி அளித்தது என்பதை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தெளிவுபடுத்த வேண்டும். தேஜஸ்வி யாதவ் செயல் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிபோராட்டம் தொடரும்! டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்த போலீசுக்கு உத்தரவிட்டது யார்? இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்கும் வரை, பார்லி.,யில் எங்களது போராட்டம் தொடரும். 'பெல்லட்' குண்டுகளை பயன்படுத்தி, நம் மாணவர்களை துன்புறுத்த சொன்னது யார்? பவன் கெரா ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !